இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவித்த ஆப்கன் அதிபர் அஷ்ரப் கனி…!!
கொரோனா வைரஸ் நாடு முழுதும் வேகமாக பரவி வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மலேரியா மருந்தான ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’பயன்படுத்தப்பட்டு வருகிறது. உயிர்க்கொல்லி கொரோனா வைரசை எதிர்த்து போராடி வரும் நட்பு நாடுகளுக்கு, ‘ஹைட்ராக்சிக்ளோரோக்வின்’ மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது. இந்த மருந்தை அமெரிக்கா பிரேசில் மாலத்தீவு உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்திய அரசு ஏற்றுமதி செய்து வருகிறது.
ஹைட்ராக்சிக்ளோரோக்வின் மருந்தின் தேவை உலகம் முழுதும் அதிகரித்து வருவதால் அதை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் மேற்கு வங்க அரசு இறங்கியுள்ளது.முன்னதாக பல்வேறு நாட்டு தலைவர்கள் மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்ததற்காக, இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா 5 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள், ஒரு லட்சம் பாராசிட்டமால் மாத்திரைகள் வழங்குகிறது. இதேபோல் 75 ஆயிரம் டன் கோதுமையையும் இந்தியா அனுப்பி வைக்க உள்ளது. முதற்கட்டமாக 3 லட்சம் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளும், 70 ஆயிரம் பாராசிட்டமால் மாத்திரைகளும் அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக இந்தியாவுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி நன்றி தெரிவித்துள்ளார்.
Thank you my friend Prime Minister @narendramodi , and thank you India for providing 500K tablets of hydroxychloroquine, 100K tablets of paracetamol, and 75,000 metric tons of wheat that the first consignment of it (5,000) will reach AFG in a day or so, for the Afghan people.
— Ashraf Ghani (@ashrafghani) April 20, 2020
Leave your comments here...