வாய் கொழுப்பு எடுத்து பேசினால் இப்படி தான் நடக்கும் – பிரதமர் குறித்து அவதூறு பேசிய பெனட் ஆன்டனி மீது வழக்குப்பதிவு
பிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக ‘Ben talks Tamil’ சேனல் என்ற பெயரில் ‘you tube’ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
பெனட் ஆன்டனி என்பவர், நடத்திய சேனிலில் பிரதமர் குறித்து, அருவெறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசி வீடியோ வெளியிட்டார்.நாகர்கோவிலை சேர்ந்தவர் பெனட் ஆண்டனி. தற்போது தானேயில் வசித்து வரும் அவர், தனியாக பென் டாக்ஸ் என்ற யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், பிரதமர் குறித்து அருவெறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். கோவை ஈஷா யோகா மையத்தின் சத்குரு, மாதா அமிர்தானந்தமயி குறித்தும், ஆபாசமாக பேசியுள்ளார். அனைவரையும் தே… என ஆபாசமாக பேசியுள்ளார்.
இது தொடர்பாக போலீசின் சைபர்கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், ஐபிசி சட்டம், சிசிபி சிஆர். எண். .113/2020 u/s 153A, 294(b), 505(2), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு முடிந்த பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பெனட் ஆண்டனி, அந்த வீடியோவை நீக்கிவிட்டார்.
போலி ஆடியோவை வெளியிட்டு பிரதமர் மீது அவதூறு பரப்பிய அவர் வெளியிட்டுள்ள வீடியோ..
வீடியோ வெளியிட்டு சகோதரருக்கு – "கருத்துக்களை கண்டிப்பாக மதிப்போம், அதேநேரத்தில் அவதூறு மற்றும் பொய்யான தகவல்களை என்றும் அனுமதிக்க மாட்டோம்" pic.twitter.com/aXWMWfENg2
— CTR.Nirmal kumar (@CTR_Nirmalkumar) April 19, 2020
இந்நிலையில் அந்த இளைஞர் தனக்கு எதிராக எப்ஐஆர் பதியப்பட்டதால், பிரதமருக்கு எதிராக ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கேட்டு இன்னொரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்:-
1.பிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக 'Ben talks Tamil' சேனல் என்ற பெயரில் 'you tube'ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு நான் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல் pic.twitter.com/WnETIMOhKg
— Narayanan Thirupathy (@Narayanan3) April 19, 2020
பிரதமரையும், அவரின் தாயாரையும் தரக்குறைவாக ‘Ben talks Tamil’ சேனல் என்ற பெயரில் ‘you tube’ல் பதிவு செய்து பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறைக்கு ஆதாரத்தோடு நான் அளித்த புகாரின் அடிப்படையில் இன்று அந்த நபரின் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்திய குற்றவியல்சட்டம் 153 (A), 294(b), 505(2), 509 ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது காவல் துறை. விரைவில் குற்றம் செய்த நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தணடனை வழங்கப்படும் என்று உறுதியாக நம்புகிறேன். விரைந்து நடவடிக்கை எடுத்த தமிழக காவல் துறை இயக்குனருக்கு என் நன்றி. சமூக ஊடங்களிலும், வீடியோ பதிவுகளிலும் யாரை குறித்தும் தரக்குறைவாக பதிவிடுவதை, பேசுவதை தவிர்க்க வேண்டும். அப்படி பதிவிடுபவர்கள் யாராக இருந்தாலும் இரும்பு கரம் கொண்டு அடக்குவதன் மூலமே சட்டம் ஒழுங்கை, சமூக கட்டுப்பாட்டை பேண முடியும் என கூறியுள்ளார்.
Leave your comments here...