விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி எம்.எல்.ஏ ஏற்ப்பாட்டில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

தமிழகம்

விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி எம்.எல்.ஏ ஏற்ப்பாட்டில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

விளவங்கோடு தொகுதியில் விஜயதாரணி எம்.எல்.ஏ ஏற்ப்பாட்டில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு மத்திய மாநில அரசுகள் பிறப்பித்துள்ளன. இதனால் மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.

விளவங்கோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் விஜயதாரணி அவர்கள் தனது நிதியில் இருந்து தொகுதிக்குட்பட்ட ஆலஞ்சோலை காலணி அணைமுகம், மஞ்சாலுமூடு, மாங்கோடு, உள்ளிட்ட பல பகுதிகளில் வாழும் நலிவுற்ற ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து அரிசி, பருப்பு, காய், கனி மற்றும் மசாலா வகைகளும் வழங்கப்பட்டன. தொடர்ந்து இந்த உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றனர்.


முன்னதாக விஜயதரணி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் ஏப்ரல் 15 முதல் 30-ந்தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது கொரோனா நோயை மேலும் பரவ விடாமல் தடுக்கும். தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ரேஷன் கார்டுகளுக்கு இலவச குடிமை பொருள் வழங்குவதுபோன்று அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் தலா ரூ 2 ஆயிரம் வழங்க வேண்டும்.

தொடர்ந்து 45 நாட்கள் ஊரடங்கு கடை பிடிக்கும் வேளையில் வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் வேலை, கல்வி, வியாபாரம் என சென்றும், வாகனம் ஓட்டி சென்றும் சிக்கி இருப்பவர்களை மீட்டு குடும்பத்தினருடன் சேர்க்க மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அழுகும் வேளாண் பொருட்களை முறையாக சந்தைப்படுத்தி நுகர்வோரை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருட்களுடன் வரும் சரக்கு வாகனங்களையும், பொருட்களை இறக்கியபின் காலியாக செல்லும் சரக்கு வாகனங்களையும் தடையின்றி இயக்க அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...