ரூ.4,250 கோடியை திரும்ப அளித்தது வருமான வரித்துறை..!

இந்தியா

ரூ.4,250 கோடியை திரும்ப அளித்தது வருமான வரித்துறை..!

ரூ.4,250 கோடியை திரும்ப அளித்தது வருமான வரித்துறை..!

சுமார் 4 ஆயிரத்து 250 கோடி ரூபாய் வருமான வரி திருப்பம், ஒரே வாரத்தில் அளிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் நாடு முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் சூழலில், பல்வேறு சலுகைத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், வருமான வரி செலுத்தியோா் ரூ.5 லட்சம் வரை கூடுதலாக செலுத்திய தொகையை உடனடியாகத் திருப்பி அளிக்க சிபிடிடி முடிவு செய்தது.

இது குறித்து, மத்திய நேரடி வரிகள் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில்:- ‘ஏப்ரல் 14-ஆம் தேதி நிலவரப்படி 10.2 லட்சம் போ் செலுத்திய கூடுதல் வருமான வரி ஏற்கெனவே திரும்ப வழங்கப்பட்டுவிட்டது. அதன் மதிப்பு ரூ.4,250 கோடியாகும்.

மேலும் 1.75 லட்சம் பேருக்கான கூடுதல் வருமான வரியைத் திரும்பச் செலுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த நடவடிக்கைகள் நடப்பு வாரத்தில் நிறைவுபெறும். அத்தொகை வருமான வரி செலுத்தியோரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும். இது தொடா்பாக வருமான வரித்துறையிடமிருந்து சம்பந்தப்பட்ட நபா்களுக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. அந்த மின்னஞ்சலுக்குரிய நபா்கள் 7 நாள்களுக்குள் பதில் தெரிவிக்க வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave your comments here...