கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக புகையிலை மென்று துப்புவதை தடைசெய்ய வேண்டும் – மாநில அரசுகக்கு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தல்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7 ஆயிரத்தை தாண்டி உள்ளது. 239 பேர் உயிரிழந்துள்னர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல், சமூக விலகல், முக கவசங்கள் அணிவது, வீடுகளை சுத்தமாக வைத்துக்கொள்வது என பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.சில பகுதிகளில் பொதுமக்கள் சமூக விலகலை கடைப்பிடிக்காமலும், மாஸ்க் அணியாமல் நெருக்கமாக செல்வது போன்ற செயல்களால் கொரோனா வைரஸ் பரவல் 3-ம் கட்டத்திற்கு சென்றுவிடுமோ என்ற அச்சத்தை உருவாக்கி உள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, புகையிலை நுகர்வை தடை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
பொது இடங்களில் புகையிலையை பயன்படுத்துவதையும், மென்று துப்புவதைவும் தடை செய்யும்படி அனைத்து மாநில அரசுகளையும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.‘மெல்லும் புகையிலை பொருட்கள், பான் மசாலா மற்றும் அர்கா நட் ஆகியவற்றை மெல்லுவதால் உமிழ்நீர் உற்பத்தி அதிகமாகும். அந்த எச்சிலை தொடர்ந்து துப்ப வேண்டியிருக்கும். இவ்வாறு பொது இடங்களில் துப்புவது கொரோனா வைரசின் பரவலை அதிகரிக்கும்’ என சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Leave your comments here...