கொரோனா தடுப்பு நடவடிக்கை : உலகம் முழுவதும் உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது..!

உலகம்

கொரோனா தடுப்பு நடவடிக்கை : உலகம் முழுவதும் உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது..!

கொரோனா தடுப்பு நடவடிக்கை : உலகம் முழுவதும்  உதவும் வகையில் ஆப்பிள் நிறுவனம் 20 மில்லியன் முக கவசங்களை நன்கொடையாக வழங்கி உள்ளது..!

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 209 நாடுகளுக்கு பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போதைய நிலவரப்படி உலகம் முழுவதும் 16 லட்சத்து 2 ஆயிரத்து 899 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 11 லட்சத்து 50 ஆயிரத்து 931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 49 ஆயிரத்து 148 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 3 லட்சத்து 56 ஆயிரத்து 283 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு 95 ஆயிரத்து 685 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் உலகம் முழுவதும் 20 மில்லியன் முக கவசங்களை வழங்கி உள்ளதாகவும், மேலும் வாரத்திற்கு 1 மில்லியன் என்ற அளவில் பேஸ் ஷீல்டுகளை உற்பத்தி செய்து வருவதாகவும் அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்:- ‘இது உண்மையிலேயே உலகளாவிய முயற்சி ஆகும். அதிக அளவ்ல தேவைப்படும் இடங்களுக்கு முக கவசங்கள் நன்கொடை வழங்குவதை உறுதிசெய்ய அந்தந்த பகுதி அரசாங்கங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். முதல்கட்டமாக கடந்த வாரம் சிலிக்கான் பள்ளத்தாக்கிலுள்ள சில மருத்துவமனைகளுக்கு பேஸ் ஷீல்டுகள் வழங்கப்பட்டன. ஒரு பெட்டிக்கு நூறு என்ற கணக்கில் அடுக்கி அவற்றை அனுப்புகிறோம். 2 நிமிடங்களுக்குள் அதனை எடுத்து பயன்படுத்தும் விதமாக அவை உள்ளன. இந்த முக கவசங்கள் ஒவ்வொருவரின் முக அளவிற்கு ஏற்ப மாற்றி அமைத்து கொள்ளும் திறன் கொண்டவை.


இந்த வார இறுதிக்குள் 1 மில்லியன் பேஸ் ஷீல்டை தயாரித்து அனுப்ப திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு வாரத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான பேஸ் ஷில்டுகளை தயாரித்து அனுப்ப உள்ளோம். ஆப்பிள் நாடு முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்களுடன் ஒருங்கிணைந்து இந்த சாதனங்களை மிகவும் தேவைப்படும் இடத்திற்கு கொண்டு செல்கிறது. விரைவில் அமெரிக்காவிற்கு வெளியே இந்த பணிகளை விரிவுபடுத்துவோம்’ என்று கூறியுள்ளார்.

Leave your comments here...