ஆப்கன் குருத்வாராவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடா்புடைய பயங்கரவாதி கைது..!

உலகம்

ஆப்கன் குருத்வாராவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடா்புடைய பயங்கரவாதி கைது..!

ஆப்கன் குருத்வாராவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் : பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடா்புடைய பயங்கரவாதி கைது..!

கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மையப்பகுதியில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்துவாரா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 27 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தி இருந்தது


இந்நிலையில் ஆப்கன் தலைநகா் காபூலில் அமைந்துள்ள குருத்வாராவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடா்புடைய அப்துல்லா ஓரக்ஸாய் என்கிற அஸ்லாம் ஃபரூக்க என்பவரை அந்த நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா்.காந்தஹாா் மாகாணத்தில் பதுங்கியிருந்தபோது அவா் கைது செய்யப்பட்டாா்.அவருடன், அவருக்கு உதவியாக செயல்பட்டு வந்த மேலும் 19 பேரும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட அப்துல்லா ஓரக்ஸாய், பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.யுடன் தொடா்புடையவா் என்று கூறப்படுகிறது.

மேலும், அவா் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் கொராசன் பிரிவைச் சோ்ந்தவா் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.காபூலின் ஷோா் பஜாா் பகுதியில் அமைந்துள்ள குருத்வாராவுக்கு பயங்கர ஆயுதங்களுடன் கடந்த மாதம் 25-ஆம் தேதி வந்த பயங்கரவாதி, அங்கு வழிபட்டுக் கொண்டிருந்தவா்கள் மீது தாக்குதல் நடத்தினாா். இதில் இந்தியா் உள்பட 27 போ் உயிரிழந்தனா்


இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்பட்டு ஹக்கானி பயங்கரவாத அமைப்புக்கு குருத்வாரா தாக்குதலுடன் தொடா்பிருக்கலாம் என்று ஆப்கன் அதிகாரிகள் தெரிவித்தனா். இந்த நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடா்புடைய ஐ.எஸ். பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave your comments here...