வேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்

உலகம்

வேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்

வேகமாக பரவி வரும் கொரோனாவை ஒழிக்க ஊரடங்கு மட்டுமே பலன் தராது- உலக சுகாதார அமைப்பு தகவல்

இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று முன் தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த அறிவிப்பை வெளியிட்டு மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதையடுத்து, நாடு முழுவதும் ஊரடங்கு தீவிரமாக கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வெளியில் அவசியம் இன்றி சுற்றுவோரை போலீசார் எச்சரித்து அனுப்பி வருகின்றனர்.கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கிற்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், கொரோனாவை ஒழிக்க ஊரங்கு மட்டுமே பலன் தராது உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.

டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ்


இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அந்தானம் கேப்ரியசஸ் கூறியதாவது: கொரோனா வைரஸ் பரவலை குறைக்க, பல நாடுகள் ஊரடங்கு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன. ஊரடங்கு உத்தரவின் மூலம் மக்களை வீட்டுக்குள் இருக்க சொல்வது சுகாதாரத் துறையின் மீதான அழுத்தத்தை குறைக்கும். வைரசை அழிக்க இந்த நடவடிக்கை மட்டுமே போதுமானதல்ல.கொரோனா வைரசை ஒழிக்க இந்த நேரத்தை பயன்படுத்த அனைத்து நாடுகளுக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம்.


சுகாதாரப் பணியாளர்கள், பரிசோதிக்கும் மையங்களை அதிகரித்து கொரோனாவை ஒழிக்க தீவிரம் காட்ட வேண்டும்.தனிமைப்படுத்தப்பட்ட மக்களுக்கு பரிசோதிக்கும் வசதியை உருவாக்க வேண்டும். பாதிக்கப்பட்டோரிடம் இருந்து யாருக்கு நோய் வருகிறது என்பதை கண்டறிய தெளிவான திட்டம் தேவை.இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...