கொரோனா வைரஸ் – சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை – கூகுள்

உலகம்

கொரோனா வைரஸ் – சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை – கூகுள்

கொரோனா வைரஸ் – சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை – கூகுள்

உலகையே உலுக்கி வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் நலனுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என கூகுள் விரும்பியது. இது குறித்து சமீபத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ”கொரோனா பாதித்துள்ளதா இல்லையா?, பாதித்திருந்தால் எப்படி கண்டுபிடிக்க வேண்டும்? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ள தனி வெப்சைட்டை கூகுள் உருவாக்கி வருகிறது” என அறிவித்திருந்தார். இது பற்றிய பல்வேறு வாத பிரதிவாதங்களுக்குப் பிறகு கூகுளின் துணை நிறுவனமான வெரிலி, கொரோனா வெப்சைட்டை துவக்கி விட்டது.


இப்போதைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மட்டும் இந்த வெப்சைட் துவக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்துவோர், அமெரிக்க குடிமக்களாகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். கூகுள் கணக்கு வைத்திருக்க வேண்டும். சுய விபரங்களை பகிர்ந்துகொள்வதற்கு கூகுளின் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த விபரங்கள் அரசு துறைகளுடன் பகிர்ந்துகொள்ளப்படும். பொதுசுகாதார நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதத்தில் கையெழுத்திட வேண்டும். கலிபோர்னியாவில் உள்ள பயோடெக்னாலஜி நிறுவனம், கலிபோர்னியா கவர்னர் அலுவலகம், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து இந்த வெப்சைட் செயல்படும்.


பரிசோதனை செய்யப்பட வேண்டியவர்கள், அருகில் உள்ள நடமாடும் பரிசோதனை நிலையங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுவர். ஒரு முறை பரிசோதனை செய்யப்பட்டால், அடுத்து வரும் சில நாட்களில் அவர்களுக்கு முடிவு தெரியப்படுத்தப்படும். இது குறித்து வெரிலி கூறும்போது, ‘அதிக பாதிப்பு இருப்பதால் கலிபோர்னியாவில் இப்போதைக்கு வெப்சைட்டை தொடங்குகிறோம்,’ என்று கூறியுள்ளது. இந்த வெப்சைட்டுக்கு (www.projectbaseline.com/)என பெயரிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு பற்றிய புள்ளி விபரங்களும் இதில் சேகரிக்கப்படுகின்றன. கலிபோர்னியாவில் இந்த வெப்சைட் செயல்படும் விதத்தைப் பொறுத்து மற்ற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Leave your comments here...