மாஸ்டர் இசை வெளியீட்டு விழா – சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது – என்ன சொல்ல வருகிறார் நடிகர் விஜய்.?
விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில்தான் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு விஜய் கோட் சூட் உடையில் வருகை தந்தார். ஒரே வரிசையில் மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு ஆகிய மூவருக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.
இந்த விழாவிற்கு வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் அவரது தாய் ஷோபாவை மேடைக்கு அழைத்தனர். அப்போது சந்திரசேகரை சில வார்த்தைகள் பேச சொன்ன போது அவர் ‘என்னால் பேச முடியவில்லை. அதிக மகிழ்ச்சியில் இருக்கும் போது வார்த்தைகள் வராது என்பார்கள். அது இப்போது நடந்துள்ளது’ என்றார். மேலும் அவரது தாய் ஷோபாவை ஒரு பாடலை பாட சொன்னார்கள் அவர் மறுத்துவிட்டார். விஜய் மாஸ்டர் படத்தில் ஆங்கிலத்தில் பாடியுள்ள பாடல் தனக்குப் பிடித்துள்ளதாக கூறினார்.
"Enaku Vijay kitta oru hug venum!"
Thalapathy walks up to the stage. 😍
Perfect Mom-Son moment! #Master #MasterAudioLaunch pic.twitter.com/Uozd8PBFPN— XB Film Creators (@XBFilmCreators) March 15, 2020
ஒரு தாயாக நீங்கள் இந்த மேடையில் விஜயிடம் கேட்க விரும்புவது என்ன என்று கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர் என்ன சொல்லப் போகிறார் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அவர் மிக எளிமையான ஆசையை வெளிப்படுத்தினார். என் மகன் என்னை கட்டி அணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
மேலும் நடிகர் விஜய் பேசுகையில்:- மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் இல்லை என்பது எனக்கு வருத்தமளிக்கிறது. நம்மை பிடிக்காதவர்கள் நம் மீது கல் எறிவார்கள். அவர்களை சிரிப்பாலேயே கொல்ல வேண்டும். உண்மையாக இருக்க வேண்டும் எனில் சில நேரங்களில் ஊமையாக இருக்க வேண்டும். நண்பர் அஜித் மாதிரி இந்நிகழ்வுக்கு கோட் ஷூட் போட்டு வந்திருக்கிறேன். நன்றாக இருக்கிறதா? விஜய் சேதுபதி எனக்கு பெயரில் மட்டும் இடம் கொடுக்கவில்லை, மனதிலும் இடம் கொடுத்துள்ளார்” என்றார். நாட்டில் மக்களுக்குத் தேவையானதைத்தான் சட்டமாக உருவாக்க வேண்டும்.சட்டத்தை உருவாக்கி விட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது.எது நடந்தாலும் நம் கடமையைச் செய்து கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சித் தொகுப்பாளர் மேடையில் உள்ள விஜய்யிடம் 20 வருடத்திற்கு முன்பு வாழ்ந்த விஜயிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்றால் என்ன கேட்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் விஜய், ரெய்டு எல்லாம் இல்லாத அந்த அமைதியான வாழ்க்கை வேண்டும் என்று கேட்பேன் என்றார்.கரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக ஆடியோ வெளியீட்டு நிகழ்வில் ரசிகர்கள் தவிர்க்கப்பட்டது எனக்கு வருத்தமே. அதற்கு அரைமனதோடுதான் நான் ஒப்புக் கொண்டேன் என்றார்.
Leave your comments here...