கோவை இந்து முன்னணி பிரமுகர் ஆனந்த மீது கொடூர தாக்குதல்: தகுந்த பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் – ஏபி முருகானந்தம் எச்சரிக்கை…!
கோவை மாவட்ட இந்து முன்னணி செயலாளராக ஆனந்த் என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்றிரவு கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் அவரும் அவருடைய நண்பரும் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிச் சென்றனர். அப்போது ஆனந்த் கோவை ராமநாதபுரம் பகுதியை கடந்து குறிச்சி செல்வதற்காக நஞ்சுண்டாபுரம் வழியாக சென்றனர்.
அப்போது அங்கு உள்ள ஒரு பாலத்தின் கீழ் சென்ற போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் ஆனந்தை இரும்புக்கம்பியால் பலமாக தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இந்நிலையில் சுதாரித்துக் கொண்ட ஆனந்த் உடனடியாக அவருடைய நண்பர் ஹரி என்பவருக்கு போன் செய்து நடந்ததை கூறினார் அதனைத் தொடர்ந்து அவருடைய நண்பர் சம்பவ இடத்திற்கு விரைந்து அங்குள்ள பொதுமக்கள் உதவியுடன் அந்த ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு மொத்தம் 20 தையல்கள் போடப்பட்டது. இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனைக்கு தற்போது ஆனந்த் மாற்றப்பட்டுள்ளார். தற்போது ஆனந்த நலமாக உள்ளார்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்து கோவை சேரந்த பாஜகவின் அகில இந்திய இளைஞர் அணி துணைத் தலைவர் ஏபி முருகானந்தம் அவரை நேராக மருத்துவமனையில் சென்று சந்தித்து உள்ளார்.
பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, இப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும்
கோவை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மதுக்கரை ஆனந்த் அவர்களை நேரில் சென்று பார்த்தேன்.எல்லாம் வல்ல இறைவன் பூரண குணமடைய அருள்புரிவானாக.
தகுந்த பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் ! pic.twitter.com/L59Z5gYkVw
— A.P. Muruganandam முருகானந்தம் 🇮🇳 (@apmbjp) March 5, 2020
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பதிவு செய்து உள்ளார் அதில்:- பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டு, இப்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் கோவை இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மதுக்கரை ஆனந்த் அவர்களை நேரில் சென்று பார்த்தேன்.எல்லாம் வல்ல இறைவன் பூரண குணமடைய அருள்புரிவானாக. தகுந்த பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும் என குறிப்பிட்டு உள்ளார்.
Leave your comments here...