விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் பாக்கிஸ்தானுக்கு விளையாட சென்ற இந்திய கபடி அணி

விளையாட்டு

விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் பாக்கிஸ்தானுக்கு விளையாட சென்ற இந்திய கபடி அணி

விளையாட்டு அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் பாக்கிஸ்தானுக்கு விளையாட சென்ற இந்திய கபடி அணி

உலகக்கோப்பை கபடி போட்டியை முதன்முதலாக பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த ஆட்டம் இன்று (திங்கள்கிழமை) லாகூரில் உள்ள பஞ்சாப் கால்பந்து மைதானத்தில் தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, ஃபைசலாபாத் மற்றும் குஜ்ராத்திலும் இந்த போட்டிகள் நடைபெறவுள்ளன.இந்நிலையில், இந்த உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக இந்திய அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. ஆனால், பாகிஸ்தான் செல்வது குறித்து விளையாட்டுத் துறை அமைச்சகத்திடம் இருந்து எந்தவொரு முன் அனுமதியும் பெறாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு முன் 6 முறை கபடி உலகக்கோப்பை நடைபெற்றுள்ளது. 2010 முதல் 2019 வரை நடைபெற்ற 6 முறையும் இந்திய அணியே கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது. இதில் 2010, 2012, 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணி பாகிஸ்தானை வென்று உலகக்கோப்பை வென்றுள்ளது


இது குறித்து இந்திய அமெச்சூர் கபடி சம்மேளன நிர்வாகி எஸ்.பி.கார்க் கூறுகையில்:- ‘பாகிஸ்தானுக்கு கபடி அணி சென்றது குறித்து எங்களிடம் எந்த தகவலும் இல்லை. நாங்கள் எந்த கபடி அணிக்கும் அனுமதி கொடுக்கவில்லை. இது போன்ற நடவடிக்கைகளை நாங்கள் ஒரு போதும்ஆதரிக்க மாட்டோம். தவறு செய்தவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது’ என்றார்.

இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்ததும் அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு லாகூரில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஈரான், கனடா உள்ளிட்ட அணிகளும் இந்த போட்டியில் பங்கேற்க இருப்பதாக போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்

Leave your comments here...