இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை வழங்கவேண்டும்: இந்தியா வந்துள்ள ராஜபக்சேவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்
இலங்கை பிரதமராக ராஜபக்சே பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக 4 நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய அரசு சார்பில் அளிக்கப்பட்ட சிவப்பு கம்பள வரவேற்பை ராஜபகசே ஏற்றுக்கொண்டார்.
Addressing the press with @PresRajapaksa. Watch. https://t.co/6iw7Mu5r3Z
— Narendra Modi (@narendramodi) February 8, 2020
இந்தியாவும் இலங்கையும் அண்டை நாடுகள் மட்டுமல்ல நெருங்கிய நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தகம், முதலீட்டை அதிகரிப்பது, இரு நாட்டின் கூட்டு பொருளாதார திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் விவாதிக்கப்பட்டது.மக்கள் தொடர்பை அதிகரிக்கவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் நாங்கள் விவாதித்தோம். தீவிரவாதம் இந்த பிராந்தியத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. தீவிரவாதத்தை ஒழிக்க இரு நாடுகளும் இணைந்து தொடர்ந்து பாடுபடும் என கூறினார்.இலங்கைத் தமிழர்கள் பிரச்னைகள் குறித்து நானும், மகிந்த ராஜபக்சவும் விவாதித்தோம்; இலங்கை தமிழர்களின் தேவைகளை இலங்கை அரசு நிறைவேற்றும் என நம்புகிறேன். தமிழர்களுக்கு சம உரிமையும், நீதியும் கிடைக்க உறுதி செய்யுமாறு இந்தியா வந்துள்ள ராஜபக்சேவை பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
Leave your comments here...