குழந்தை ஏசு மகளிர் பள்ளியில் மாணவி பேச்சியம்மள் தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டு களத்தில் இறங்கிய இந்து முன்னணி..!!
பாளைங்கோட்டை குழந்தை ஏசு பள்ளி 10ம் வகுப்பு மாணவி பேச்சியம்மாள் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் துண்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம் மீதும் ஆசிரியர்கள் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்ய மறுத்து வரும் நிலையில் மாணவியின் குடும்பத்தினர் உடலை வாங்காமல் நீதி வேண்டி போராடி வருகின்றனர்.
இதனை எந்த அரசியல் கட்சிகளும் கண்டுகொள்ளாத நிலையில் இந்துமுன்னணி மாநில பொதுச்செயலாளர் டாக்டர். அரசுராஜா தலைமையில் இந்துமுன்னணி நிர்வாகிகள்
மாநில செயலாளர் கா.குற்றாலநாதன், கோட்ட தலைவர் தங்கமனோகர் உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று செய்துங்கநல்லூர் காவல்நிலைய முற்றுகை போராட்டத்தை அறிவித்ததும் இந்துமுன்னணி களம் இறங்கிய பின்னர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விரைவாக இயங்க துவங்கியது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் பாரத் இந்துமுன்னணி நிர்வாகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளருக்கு வழக்கு விசாரணயை மாற்றி மாவட்ட SP தற்போது உத்திரவிட்டுள்ளதாகவும், எந்த அரசியல் அழுத்தத்திற்கும் இடம் கொடுக்காமல் சிறுபாண்மை என்ற பெயரில் குற்றவாளிகள் யாரும் தப்பிக்காமல் நேர்மையைக நியாயமாக விசாரணை நடைபெறும் குற்றவாளிகளை விரைவில் நிச்சயமௌ கைது செய்வோம் என கூறினார்.
பின்னர் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் த.அரசுராஜா, மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் மாணவி இல்லத்திற்கு சென்று பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது மாணவியின் தந்தை, தாய், சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் கண்ணீர் மல்க மாணவி பேச்சியம்மாள் தொடர்ந்து குந்தை ஏசு பள்ளி நிர்வாகத்தால் துண்புறுத்தப்பட்டது குறித்து கதறினர். மேலும் ஆசிரியை லூர்துடெய்சி மற்றும் கன்னியாஸ்திரி ஒருவர் ஆகியோர் தான் மாணவியை கடுமையாக துண்புறுத்தியதாகவும் தெரிவித்தனர்.பள்ளியில் இது போல் பல மாணவிகள் துண்புறுத்தப்பட்டுள்ளதாக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தனர்.எங்களை விலை பேச பார்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். இனி ஒரு குழந்தை உயிர் பலி ஆக கூடாது. குற்றவாளியை கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனர்.
இந்துமுன்னணி பேரியக்கம் உங்கள் தர்ம போராட்டத்திற்கு துணை நிற்கும் என்றனர். களத்தில் இந்துமுன்னணியோடு போராட்டம் நான்காவது நாளாக தொடர்கிறது. இன்று ஞாயிற்றுகிழமைக்குள் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்படாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தி மாநில முழுவதும் கொண்டு செல்வது குறித்து இந்துமுன்னணி முடிவு செய்யும் என மாநில பொதுச்செயலாளர் டாக்டர் அரசுராஜா தெரிவித்தார்
இந்துமுன்னணி வழக்கறிஞர்கள் ப.சிதம்பரம் , தங்கதுரை , ஆ.ராஜா, முத்து சிதம்பரம், குமரேசன், L.T.தாஸ் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன் மாநக செயலாளர் சிவா மாநகர செயற்குழு உறுப்பினர் ராஜசெல்வம் உள்ளிட்ட இந்துமுன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
#இரக்கமற்ற_எடப்பாடி_அரசே#திராணியற்ற_காவல்துறையே
மாணவி இறந்து இன்றோடு 4 நாட்கள் ஆகிறது. பரிசோதனைக்கு பிறகு நெல்லை மருத்துவ கல்லூரி பிணவறையில் காத்திருக்கிறது உடல் . ஆசிரியைகள் மீது வழக்கு பதிவு செய்தால் மட்டுமே உடலை பெறுவோம் என்கின்றனர் குடும்பத்தினர்.#justiceforpetchiammal
— R Kesava Raman Yadav (@kesavaessar) February 1, 2020
குழந்தை இயேசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பாளையங்கோட்டை10ஆம் வகுப்பு மாணவி மதிப்பெண் குறைவாகா எடுத்த காரணத்தினால் தமிழ் ஆசிரியர் திட்டியதால் வீட்டிற்கு சென்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்.பேச்சியம்மாள் தற்கொலைக்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடு#Justiceforpetchiammal pic.twitter.com/hl51gXPLDU
— Mugavai Eswaran (@EMugavai) February 1, 2020
இந்நிலையில் ட்விட்டரில் 10ம் வகுப்பு மாணவி பேச்சியம்மாளுக்கு நிதி வேண்டி #justiceforpetchiammal என்ற ஹெஷ்டெக் டிரண்டிங் ஆகிவருகிறது.
Leave your comments here...