சென்னை எல்இடி விளக்கு நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவனம் சோதனை..!

தமிழகம்

சென்னை எல்இடி விளக்கு நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவனம் சோதனை..!

சென்னை எல்இடி விளக்கு நிறுவனத்தில் இந்திய தர நிர்ணய நிறுவனம் சோதனை..!

இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் சென்னையில் உள்ள தென் மண்டல அலுவலகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு நேற்று (28.01.2020) சென்னை பிராட்வேயில் தாத்தா முத்தையப்பா தெரு முதல் மாடியில் செயல்படும் லுவீனா லைட்டிங் நிறுவனத்தில் சோதனை மற்றும் பறிமுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்திய தர நிர்ணய நிறுவனச் சட்டம் 2016-ஐ மீறியதாகவும், இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய பதிவு சின்னம் மற்றும் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் சின்னம் ஆகியவற்றை தவறாக பயன்படுத்தியதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இந்த நடவடிக்கையின் போது, எல்இடி டியூப் லைட், எல்இடி ஸ்பாட் லைட், எல்இடி தெரு விளக்குகள், எல்இடி ஃபிளட்லைட் உள்ளிட்ட பல்வேறு வகையான 3500 எல்இடி விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2016 இந்திய தர நிர்ணய நிறுவனச் சட்டம் பிரிவு 17(3)-ஐ மீறும் வகையில் இந்த விளக்குகளில் இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் கட்டாய பதிவு சின்னம் மற்றும் அதன் நிறுவன சின்னம் ஆகியவை இடம் பெற்றிருந்தன.

இதனையடுத்து இந்த நிறுவனத்திற்கு எதிராக 2016 இந்திய தர நிர்ணய நிறுவன சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்தக் குற்றம் 2 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படக் கூடியது. எனினும் உற்பத்தி செய்யப்பட்ட அல்லது விற்கப்பட்ட அல்லது விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அல்லது ஹால்மார்க் உள்ளிட்ட தர முத்திரை பொறிக்கப்பட்டிருந்த பொருட்களின் மதிப்பை போல 10 மடங்கு வரை தண்டனை அதிகரிக்கப்படலாம். இந்த தண்டனைகள் 2016 இந்திய தர நிர்ணய நிறுவன சட்டம் பிரிவு 29-ன்படி முதல் முறை குற்றவாளிகளுக்கு ஆனது ஆகும்.


பொதுமக்கள், தரக்கட்டுப்பாட்டு உத்தரவை மீறக் கூடிய நிகழ்வுகள் ஏதும் தங்கள் கவனத்திற்கு வந்தால் அதனை சென்னை தரமணி 4-வது குறுக்குத் தெருவில் சிஐடி வளாகத்தில் உள்ள இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தகைய புகார்களை மின்னஞ்சல் மூலம் sro@bis.org.in என்ற முகவரிக்கோ அல்லது 044-22541087 என்ற எண்ணுக்கு தொலைநகல் மூலமாகவோ அனுப்பலாம். இத்தகைய புகார்கள் மற்றும் தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும். மேலும் விவரங்களுக்கு சென்னையில் உள்ள இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தென் மண்டல அலுவலகத்தை 044-22541220 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இந்த நிறுவனம் பற்றிய பொதுத் தகவல்களுக்கு அதன் இணையதளம் www.bis.gov.in  என்பதை அணுகலாம் என்று இந்திய தர நிர்ணய நிறுவனத்தின் தொடர்பு துணை இயக்குனர் திரு.அஜய் கன்னா கூறியுள்ளார்.


 

Leave your comments here...