புரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டிஎன்பிஎஸ்சி – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகம்

புரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டிஎன்பிஎஸ்சி – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

புரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டிஎன்பிஎஸ்சி – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

புரோக்கர்களின் புகலிடமாக மாறிவிட்டது டி.என்.பி.எஸ்.சி. என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இது குறித்து அவர் கூறி இருப்பது:- குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் சினிமாக்களில் வரும் காட்சியை போல் கற்பனைக்கதைகளை மிஞ்சும் வகையில் உள்ளது என தெரிவித்தார். தேர்வில் முறைகேடு நடந்த நிலையில் இத்தனை நாள் அமைச்சர் ஜெயக்குமார் எங்கே போயிருந்தார் என கேள்வி எழுப்பினார். இந்த முறைகேட்டில் திமிங்கலங்களை தப்பிக்க விட்டுவிட்டு மீன் குஞ்சுகளை சிக்க வைக்க முயற்சிக்கின்றனர் என கூறினார். மொத்தத்தில் புரோக்கர்களின் புகலிடமாக டி.என்.பி.எஸ்.சி., மாறியுள்ளது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என தெரிவித்தார்.

இது போன்று எத்தனை தேர்வுகளில் முறைகேடு நடந்தது; அதன் ஆணி வேர் எங்குள்ளது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என கூறினார். இந்த முறைகேடுகள் குறித்து உடனடியாக சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார். விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும் எனவும் கூறினார். விசாரணை நியாயமான முறையில் நடைபெறுவதற்காக ஜெயகுமாரை அமைச்சர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கூறினார். இல்லாவிட்டால் தி.மு.க., இளைஞர் அணியை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என ஸ்டாலின் கூறினார்.


குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பான விசாரணை நியாயமாக நடக்க அத்துறையின் அமைச்சர் ஜெயக்குமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். குரூப்-4 தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடப்பாடி ஆட்சியில் தரகர்களின் புகலிடமாக மாற்றப்பட்டு உள்ளது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறியுள்ளார்.

Leave your comments here...