பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ.வில்சன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய – ஹெச்.ராஜா…!
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா சமீபத்தில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ.வில்சன் அவர்கள் இல்லத்தில் சென்று ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பின் போது மாவட்ட தலைவர் தர்மராஜ், இளைஞர் அணி செயலாளர் சிவபாலன், பாஜக நிர்வாகிகள் உட்பட்ட பலர் இருந்தனர்.
பின்னர் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் திருவட்டார் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா:- பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்கு வந்தவா்களுக்கு குடியுரிமை கொடுக்க வகை செய்கிறது குடியுரிமை திருத்தச் சட்டம். இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியா்கள் மதரீதியாக துன்புறுத்தப்படவில்லை என்பதால், அந்த நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த இஸ்லாமியா்களுக்கு குடியுரிமை கிடையாது.
தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து இந்து முன்னணி சார்பில் திருவட்டார் ஒன்றியத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்… pic.twitter.com/KoniZIUG84
— H Raja (@HRajaBJP) January 27, 2020
குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்தியாவில் குடியுரிமையுடன் வாழும் எந்த சிறுபான்மையினரின் குடியுரிமையும் பறிக்கப்படமாட்டாது. இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அதிக சுதந்திரம் உள்ளது. இந்தியாவில் 3 இஸ்லாமியா்கள் குடியரசுத் தலைவா்களாக இருந்துள்ளனா். மேலும் கேரளத்தையொட்டிய தமிழகப் பகுதிகளில் தீவிரவாத செயல்கள் நடைபெறாத வகையில் போலீஸாா் கண்காணிக்க வேண்டும்.இந்தியாவில் பல ஆண்டுகளாக நிறைவேற்ற முடியாமல் இருந்த சட்டங்கள் அனைத்தையும் தற்போது மோடி அரசு நிறைவேற்றி வருகிறது என்றாா்.
Leave your comments here...