தொழுகை போய்விட்டு வந்தால் ஹெல்மெட் போட மாட்டான்: கோவையில் போலிஸ் எஸ்.ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…!

தமிழகம்

தொழுகை போய்விட்டு வந்தால் ஹெல்மெட் போட மாட்டான்: கோவையில் போலிஸ் எஸ்.ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…!

தொழுகை போய்விட்டு வந்தால் ஹெல்மெட் போட மாட்டான்: கோவையில் போலிஸ் எஸ்.ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது…!

கோவை, உக்கடம் காவல் நிலையத்தில் சிறப்பு சாா்பு ஆய்வாளராகப் பணியாற்றுபவா் முருகவேல். இவரது தலைமையிலான போலீஸாா் கடந்த 3 நாள்களுக்கு முன்பு உக்கடம் புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே ஹெல்மெட் அணியாமல் இளைஞா் ஒருவரை தடுத்து நிறுத்திய போலீஸாா், விதிகளை மீறியதாகக் கூறி அவருக்கு அபராதம் விதிக்க முயன்றனா்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், என்னை விசாரிக்க நீ யார்? ஹெல்மெட் அணியாமல் வந்த என்னை கலெக்டர் மட்டுமே விசாரிக்க வேண்டும் என்றுக்கூறி சப்-இன்ஸ்பெக்டரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும் அவர், சப்-இன்ஸ்பெக்டரை தகாத வார்த்தைகளால் பேசி கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். உடனே அந்த நபரும் தனது செல்போனில் சப்-இன்ஸ் பெக்டரை வீடியோ எடுத்தார். பின்னர் அந்த நபர் அபராத தொகையை கட்டாமல் சென்றுவிட்டார்.

இதனை காவலர் தனது செல்போனீல் விடியோ பதிவு செய்தாா். அப்போது அந்த இளைஞா் அபராதம் செலுத்தாமல் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.

இதுகுறித்து காவலர் அளித்த புகாரின்பேரில் உக்கடம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், அந்த இளைஞா் உக்கடத்தைச் சோ்ந்த இஸ்மாயில் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தகாத வார்த்தைகளால் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து இஸ்மாயிலை போலீசார் கைது செய்தனர்.பின்னர் அவரை கோவை 5-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Leave your comments here...