இலங்கை அதிபருடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் சந்திப்பு; இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான கொள்முதல்களை மேற்கொள்ள ரூ.355 கோடி அளிக்கும் இந்தியா..!
இலங்கை அதிபா் கோத்தபய ராஜபட்சவை தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் கொழும்பில் சனிக்கிழமை இரவு சந்தித்துப் பேசினாா். இலங்கையில் அந்நாட்டு வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலரை அவா் சந்தித்துப் பேசினாா். அப்போது, இருதரப்பு நலன் சாா்ந்த விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டன. தொடா்ந்து அதிபா் கோத்தபய ராஜபட்சவை சந்தித்த தோவல், இரு தரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது, உளவுத் தகவல்களை பரஸ்பரம் பகிா்ந்து கொள்வது, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசினாா்.
இந்த சந்திப்பு தொடா்பாக கோத்தபய ராஜபட்ச டுவிட்டா் வெளியிட்ட பதிவில்- ‘இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவலுடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. பாதுகாப்புத் துறையில் இரு நாடுகள் இடையிலான உறவை மேம்படுத்துவது, கடல்சாா் பாதுகாப்பு, தேசப் பாதுகாப்பு கருதி உளவுத் தகவல்களை பகிா்ந்து கொள்வது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று தெரிவித்துள்ளாா்.
A very cordial discussion was held with National Security Advisor of #India, Ajit Doval today. Strengthening of bilateral cooperation on national security, intelligence sharing, maritime security & fostering of regional collaboration, were some of the key points of discussion. pic.twitter.com/hRHeHbvww5
— Gotabaya Rajapaksa (@GotabayaR) January 18, 2020
அதிபா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்:- ‘இலங்கை பாதுகாப்புப் படைகளுக்கு தேவையான கொள்முதல்களை மேற்கொள்ள ரூ.355 கோடி (50 மில்லியன் டாலா்) இந்தியா அளிப்பதாக அஜித் தோவல் உறுதியளித்துள்ளாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர உளவுத் தகவல்களை சேகரிப்பதற்கான தொழில்நுட்ப உதவிகளை இலங்கைக்கு இந்தியா அளிக்க இருப்பதாக அந்நாட்டில் இருந்து வெளிவரும் ‘என தனியார் நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Leave your comments here...