எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்.? சர்ச்சையை ஏற்படுத்திய வேலூர் இப்ராஹிம் ஒட்டியுள்ள போஸ்டர்..!

அரசியல்தமிழகம்

எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்.? சர்ச்சையை ஏற்படுத்திய வேலூர் இப்ராஹிம் ஒட்டியுள்ள போஸ்டர்..!

எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்.? சர்ச்சையை ஏற்படுத்திய வேலூர் இப்ராஹிம் ஒட்டியுள்ள போஸ்டர்..!

குடியுரிமை சட்ட திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகளிலும் வெற்றிகரமான தாக்கல் செய்யப்பட்டு தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்கிவிட்டதால், இந்த சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த சட்டம் காரணமாக இந்தியாவில் கிறிஸ்துவர், இந்து, சீக்கியர், ஜைனர், கிறிஸ்தவர், பார்சி மற்றும் புத்த மதத்தினர் மட்டுமே இதன் மூலம் குடியுரிமை பெற முடியும். அதேபோல் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தலுக்கு உள்ளானவர்கள் மட்டுமே இங்கு குடியுரிமை பெற முடியும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு வடகிழக்கு மாநிலங்களான அசாம், திரிபுரா மற்றும் மேகாலயாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைப்போல பாஜக சார்பில் குடியுரிமை சட்டத்தை குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பேரணி நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தமிழகத்தில் எதிர்கட்சி திமுக , மதிமுக , விசிக உள்ளிட்ட கட்சிகளும், மாணவ அமைப்புகளும், இஸ்லாமிய அமைப்புகளும்  குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறார்கள். கேரளா, பாஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேற்று சென்னையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஆளுநர் மாளிகையை நோக்கி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தினர். 

இந்நிலையில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

பாஜக ஆதரவாளரும் தமிழ்நாடு ஏகத்துவ பிரச்சார ஜமாஅத் மாநிலத் தலைவர் வேலூர் எம்.சையத் இப்ராஹிம் அவர்களின் இயக்கத்தில் சார்பில் ஒட்டியுள்ள போஸ்டரில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) க்கு எதிராக முஸ்லிம்களை வன்முறை செய்ய தூண்டி கலவரத்தை ஏற்படுத்த முயலும் தேச விரோத சக்தியான எஸ்டிபிஐ கட்சி மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை தடைசெய்ய வேண்டுமென போஸ்டர் ஒட்டியுள்ளார். இந்த போஸ்டர் விவகாரம் இஸ்லாமிய அமைப்புகள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏறப்பபடுத்தி வருகிறது..!

Leave your comments here...