எஸ்ஐ.வில்சன் கொலை வழக்கு : 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம்: பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு..!

தமிழகம்

எஸ்ஐ.வில்சன் கொலை வழக்கு : 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம்: பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு..!

எஸ்ஐ.வில்சன் கொலை வழக்கு : 20 போலீசாரை கொல்ல சதித்திட்டம்: பாளையங்கோட்டை சிறையில் அடைப்பு..!

எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரிடம் காவல்துறை நடத்திய விசாரணை நிறைவு பெற்றது. இதனையடுத்து இருவரையும் குழித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தனர்

இந்நிலையில்,  நெல்லை சரக டிஐஜி பிரவீன்குமார் தக்கலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- சிறப்பு எஸ்.ஐ. வில்சன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளவர்களை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை.அப்துல் சமீம், தவுபீக்கிடம்  நிறைய விசாரிக்க வேண்டியுள்ளது. கேள்விகளும் கேட்கப்பட வேண்டியுள்ளது. சிறப்பு எஸ்.ஐ.வில்சன் கொலை வழக்கில் கைதான அப்துல் சமீம், தவுபீக்கை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கைதான இருவரும் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தனர்.  இருவருக்கும் எந்த பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது என்பது பற்றி விசாரிக்க வேண்டி உள்ளது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து விசாரணை அதிகாரி குமரி மாவட்ட எஸ்.பி ஸ்ரீநாத் கூறுகையில்:- விசாரணையில் 20 போலீசாரை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கைதான தீவிரவாதி அப்துல் சமீம்  மீது 14 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டாளிகளை கைது செய்ததால் காவல் துறையை பழிவாங்க பயங்கர திட்டம் தீட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது கூறினார்.
 சிறையில் அடைப்பு:- 13 மணி நேர விசாரணைக்கு பின் குழித்துறை நீதிமன்றத்தில் இருவரையும் போலீஸ் ஆஜர்படுத்தியது. இருவரையும் 15 நாள் காவலில் வைக்க குழித்துறை நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார். மேலும் ஜனவரி 20 வரை இருவரையும் பாளையங்கோட்டை சிறையில் அடைக்க குழித்துறை நீதிமன்ற நீதிபதி ஆணை.!

Leave your comments here...