பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 19 பேர் கைது..!

இந்தியா

பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல் – பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 19 பேர் கைது..!

பகல்ஹாம் பயங்கரவாத தாக்குதல்  – பாகிஸ்தானுக்கு ஆதரவாக பதிவிட்ட 19 பேர் கைது..!

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததாக அசாம், மேகாலயா மற்றும் திரிபுரா மாநிலங்களில் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதில், கடற்படை மற்றும் உளவுத்தறை அதிகாரிகள் அடக்கம்.

கடந்த 24ம் தேதி, இந்த தாக்குதல் மற்றும் 2019 ல் புல்வாமாவில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் சதி உள்ளதாக கருத்து தெரிவித்த அசாமின் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி எம்.எல்.ஏ., அமினுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார்.

இதைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரின் தேடுதல் வேட்டை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தீவிரவாதிகளுக்கு உதவியதாக குல்காம் மாவட்டத்தின் கைமோ பகுதியில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குப்வாரா பகுதியில் நடத்திய சோதனையில் AK-47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. திரால், அனந்த்நாக், குல்காம் ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களின் வீடுகள் வெடி வைத்து தகர்க்கப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் அரசாணை வெளியிட்டுள்ளது. முன்னதாக பஹல்காம் சம்பவத்திற்கு பதிலடி கொடுக்க மத்திய அரசு தயாராகி வரும் சூழலில், பாதுகாப்பு நடவடிக்கைகளை நேரலை செய்ய வேண்டாம் என அனைத்து ஊடகங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தியிருந்தது

இந்நிலையில், தேசதுரோக கருத்துக்களை பதிவிட்டதாக அசாம் மாநிலத்தில் 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். மேலும், திரிபுராவில் 4 பேரும், மேகாலயாவில் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தால், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து சமூக வலைதள பதிவுகளை ஆய்வு செய்து வருவதாகவும், நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மட்டுமின்றி, வங்கதேசத்திற்கு ஆதரவாக செயல்பட்டாலும் கடுமையான நடவடிக்கை பாயும் என அவர் எச்சரித்துள்ளார் .

 

Leave your comments here...