வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா.. தற்போதைய நிலையே தொடர வேண்டும் – உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை..!

புதிய சட்டத்தின்படி, வக்ஃப் வாரிய உறுப்பினர்களை நியமிக்க உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும், நிலம் கையகப்படுத்தல், உறுப்பினர்கள் நியமனம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீதான விசாரணையை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு நேற்று தொடங்கியது.
அப்போது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அத்துடன் இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி, வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தது.
அதன்படி இன்று மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் தொடங்கியது. அப்போது, வக்பு வாரிய சட்டத்திருத்த விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மேலும், நிலம் வகைப்படுத்தல், உறுப்பினர் நியமனம் அனைத்தும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என விரும்புகிறோம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு சார்பில் வக்பு திருத்த சட்டத்தின் சில சரத்துகளை பார்த்து உத்தரவு பிறப்பிக்க கூடாது. இடைக்கால தடையும் விதிக்கக் கூடாது என வாதிடப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணமாக சம்பந்தப்பட்ட தரப்பு பாதிக்கப்படக் கூடாது என்பதால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Leave your comments here...