அதிமுகவை குறிப்பிட்டுச் சொன்னாரா? தவறா சொல்லாதீங்க- அண்ணாமலை பேச்சு குறித்த கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம்..!

பாஜக.,வுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, ‘அ.தி.மு.க.,வை அவர் குறிப்பிட்டாரா’ என எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.
கோவை விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில், ‘பா.ஜக., தீண்டத்தகாத கட்சி. நோட்டா கட்சி. பா.ஜக., வந்ததால் தோற்றோம் என்றவர்கள் இன்று பா.ஜக., வேண்டும் என தவம் இருக்கும் சூழ்நிலையை எங்கள் கட்சி தலைவர்களும் தொண்டர்களும் உருவாக்கி உள்ளது பெருமை அளிக்கிறது. பா.ஜக., இல்லாமல் அரசியல் இல்லை என்ற சூழ்நிலையை உருவாகி உள்ளது. மற்றபடி எந்த கட்சியையும், தலைவரையும் குறைத்து பேசவில்லை’ என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 08) பா.ஜகக.,வுடன் கூட்டணி வைக்க அ.தி.மு.க., தவம் கிடக்கிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., அளித்த பதில்:
எங்க அ.தி.மு.க.,வை குறிப்பிட்டாரா? தவறாக பேசாதீங்க, தயவு செய்து தவறாக பேசாதீங்க. எங்க அப்படி யார் சொன்னது. தவறாக நீங்க வந்து போட்டு கொடுத்து வாங்காதீங்க. ஏற்கனவே சொல்லிவிட்டேன். 6 மாதம் கழித்து கூட்டணி குறித்து பேசப்படும் என்று தெளிவுபடுத்தி விட்டேன். பத்திரிகை, ஊடகங்களுக்கும் அதுதான் செய்தி. இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
Leave your comments here...