F-35 போர் விமானம் ஒப்பந்தம் முதல் பயங்கரவாதி கடத்தல் வரை – வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்-மோடி சந்திப்பு..!

இந்தியாஉலகம்

F-35 போர் விமானம் ஒப்பந்தம் முதல் பயங்கரவாதி கடத்தல் வரை – வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்-மோடி சந்திப்பு..!

F-35 போர் விமானம் ஒப்பந்தம் முதல் பயங்கரவாதி கடத்தல்  வரை – வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்-மோடி சந்திப்பு..!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) அதிகாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது, F-35 போர் விமானங்களை வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, வர்த்தக ஒப்பந்தம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பிலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, உலக பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தன் குடும்பத்துடன் சந்தித்தார். பின்னர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபரும், அமெரிக்க ஆளுங்கட்சி முக்கியஸ்தருமான விவேக் ராமசாமி சந்தித்து பேசினார்.

பின்னர், அமெரிக்க அதிபராக இரண்டாவது முறை பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்பை, பிரதமர் மோடி வெள்ளை மாளிகையில் இன்று அதிகாலை சந்தித்து பேசினார். வெள்ளை மாளிகையில் நடந்த சந்திப்பிற்குப் பின், பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது டிரம்ப் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி மேற்கொண்ட ஆலோசனைகள்:-  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.14) அதிகாலை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ரானாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது, F-35 போர் விமானங்களை வாங்குவது, எண்ணெய் இறக்குமதி, வர்த்தக ஒப்பந்தம் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து இருதரப்பிலும் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில் தொடர்புடைய கனடா வாழ் பாகிஸ்தானியரான தஹாவூர் ராணா. மும்பை தாக்குதலை திட்டமிடுவதற்காக மும்பையின் தாஜ் மஹால் ஓட்டலில் சில நாட்கள் தங்கியிருந்து நோட்டமிட்டதாக ராணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ரானா அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, ரானாவை நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம் ரானாவை நாடுகடத்த பச்சைக்கொடி காட்டியது.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: அன்பான வரவேற்பு, சிறந்த விருந்தோம்பல் அளித்த எனது நண்பர், டிரம்புக்கு எனது நன்றி. இந்திய- அமெரிக்க உறவை போற்றியுள்ள டிரம்ப், தற்போது அதனை மீண்டும் உயிர்ப்பித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் போரை பொறுத்தவரை, அதிபர் டிரம்ப் அமைதியை மீட்டெடுக்க முயற்சி செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியா – அமெரிக்கா இடையே கூட்டாண்மை ஜனநாயகம் வலுவடைந்துள்ளது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பைப் பாதுகாக்க இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை அமெரிக்காவுடன் இணைந்து வலுப்படுத்துவோம். லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் துணைத் தூதரகங்களை திறக்க முடிவு செய்திருக்கிறோம்.

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியா – அமெரிக்கா ஒன்றாக இணைந்திருக்கின்றன. எல்லையின் மறுபக்கத்தில் உருவாகும் பயங்கரவாதத்தை ஒழிக்க, உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். 2008ம் ஆண்டு இந்தியாவில் இனப்படுகொலை செய்த, குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முடிவு செய்ததற்காக அதிபருக்கு நான் நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள், அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்.

பிரதமர் மோடி – அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள்

அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திரும்பப் பெற, இந்தியா தயாராக உள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், ஏமாற்றப்பட்டு, பெரிய கனவுகளுடன் இங்கு கொண்டு வரப்பட்டவர்கள். இதனை தடுப்பது அவசியம். இதற்காக, இந்தியா அமெரிக்கா இணைந்து செயல்படும். டிரம்ப் இதற்க முழு ஒத்துழைப்பு அளிப்பார் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான ராணுவ தளவாட ஒப்பந்தங்கள் குறித்து பேசிய அதிபர் ட்ரம்ப், “இந்தியாவுக்கு ராணுவ தளவாடங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரிக்கவுள்ளது. இந்தியாவுக்கு F35 ஸ்டீல்த் ஃபைட்டர் விமானங்களை வழங்கவுள்ளோம் என்று ட்ரம்ப் கூறினார்.

அதிபர் டிரம்ப் பேசியதாவது: பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் வரவேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாங்கள் இங்கும், இந்தியாவிலும் நிறைய நேரம் செலவிட்டிருக்கிறோம். 5 ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் அழகான நாட்டிற்கு நான் பயணம் செய்தேன். அது ஒரு நம்பமுடியாத காலகட்டம். இது சிறப்பு பிணைப்பை உருவாக்கியது.

2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய, சதித்திட்டக் குற்றவாளி, தஹாவூர் ராணாவை நாடு கடத்துவதற்கு எனது நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் பெடரல்ஸ் சிறையில் உள்ள, பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி ராணா, மிகவும் மோசமானவன்.

இந்தியாவிற்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை வழங்கும் முன்னணி நாடாக அமெரிக்கா இருப்பதை உறுதி செய்யும், எரிசக்தி தொடர்பான ஒரு முக்கியமான ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக பாதையான, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் உருவாக்க நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்ற உள்ளோம். இது இந்தியாவிலிருந்து இஸ்ரேல் முதல் இத்தாலி வரை சென்று பின்னர் அமெரிக்கா வரை செல்லும்.

F-35 போர் விமான ஒப்பந்தம்: 

இந்த ஆண்டு முதல், இந்தியாவுக்கான இராணுவ தளவாடங்கள் விற்பனையை பல பில்லியன் டாலர்களால் அதிகரிக்க உள்ளோம். இந்தியாவிற்கு எப்.,35 ஸ்டீல்த் போர் விமானங்களை வழங்கவும் முடிவு செய்திருக்கிறோம்.

இந்தியா மற்ற நாடுகளை விட அதிகமாக வரி விதிக்கிறது. அதனால் தான், நாங்களும் அதிக வரி விதிக்கிறோம். ஹார்லி டேவிட்சன் பைக்குகளை, இந்தியாவில் விற்க முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...