அமெரிக்க குடியுரிமை… குழந்தையை பெற்றெடுக்க அவசரம் காட்டும் இந்திய வாழ் தம்பதிகள்..!

உலகம்

அமெரிக்க குடியுரிமை… குழந்தையை பெற்றெடுக்க அவசரம் காட்டும் இந்திய வாழ் தம்பதிகள்..!

அமெரிக்க குடியுரிமை… குழந்தையை பெற்றெடுக்க அவசரம் காட்டும் இந்திய வாழ் தம்பதிகள்..!

பிறப்பால் அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்கு தடை விதித்து அதிபர் டிரம்ப் பிறப்பித்த உத்தரவு பிப்.,19 ல் நடைமுறைக்கு வர உள்ளதால், அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து இந்தியாவை சேர்ந்த கர்ப்பிணிகள் மருத்துவமனைகளை நாடி வருகின்றனர்.

அமெரிக்காவில் பிறப்புசார் குடியுரிமை விவகாரத்தில் இந்திய கர்ப்பிணிகள் முன்கூட்டியே பிரசவிக்க காத்திருக்கின்றனர். அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு தடாலடியான அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் முக்கியமாக, பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக குடியுரிமை பெறும் நடைமுறையை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்தார். இந்த புதிய உத்தரவு 30 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியர்களிடையே பெரிதும் பாதிப்பை உண்டாக்கும் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, பிப்.19ம் தேதி வரை அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே ‘அமெரிக்க குடியுரிமை’ கிடைக்கும் என்பதால் அதற்குள் குழந்தையை (C-SECTION) அறுவை சிகிச்சை மூலம் பெற்றெடுக்க அமெரிக்க வாழ் இந்திய தம்பதிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமெரிக்காவில் சிசேரியன் மூலம் குறை பிரசவத்தை தேர்ந்தெடுக்கும் இந்திய தம்பதிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. ஆனால் பிரசவ தேதிக்கு முன்பே சிசேரியன் மூலம் குழந்தைகளை பிரசவிப்பது ஆபத்தானது என்று அமெரிக்க மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கர்ப்பத்தின் 8 அல்லது 9வது மாதத்தில் உள்ள பெண்கள் சிசேரியன் மூலம் பிரசவிக்க முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 அல்லது 3வது மாத தொடக்கத்தில் உள்ள இந்திய கர்ப்பிணிகளும் குறை பிரசவத்துக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

Leave your comments here...