மகா கும்பமேளா.. கங்கையில் புனித நீராடினார் முதல்வர் யோகி ஆதித்யநாத்..!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் இன்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரக்யாராஜ் நகரில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் பௌஷ பௌா்ணமியையொட்டி ஜன. 13 ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதி வரை 45 நாள்களுக்கு இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது.
கும்பமேளான் முக்கிய நிகழ்வாக கங்கை, யமுனை, மற்றும் புராணங்களில் கூறப்படும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். தவிர வெளிநாட்டினர், துறவிகள், ஆன்மிகவாதிகள் என தினம் தினம் லட்சக்கணக்கானோர் பிரயாக்ராஜ் நகரில் கூடி கங்கை நதியில் புனித நீராடி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து சுமாா் 35 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் பங்கேற்பா் என்ற எதிா்பாா்ப்புடன் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளன.கும்பமேளாவையொட்டி 55-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களுடன் 45,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய, மாநில பேரிடா் மீட்புப் படையினா் களத்தில் உள்ளனா். மகாகும்ப நகரில் மட்டும் 3,000 கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
तत्राभिषेकं यः कुर्यात् संगमे शंसितव्रतः।
तुल्यं फलमवाप्नोति राजसूयाश्वमेधयोः॥एकता, समता और समरसता के महासमागम, भारतीयता और मानवता के महोत्सव, महाकुम्भ-2025, प्रयागराज में आज अपने मंत्रिमंडल के मा. सदस्यों के साथ पवित्र त्रिवेणी संगम में पावन स्नान का सौभाग्य प्राप्त हुआ।
माँ… pic.twitter.com/W9er56u5FD
— Yogi Adityanath (@myogiadityanath) January 22, 2025
இந்நிலையில் இன்று பிரக்யாராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது 54 அமைச்சர்களுடன் கங்கையில் புனித நீராடினார். அவர்களுடன் அரசு உயரதிகாரிகளும் புனித நீராடினர்.
Leave your comments here...