பாஜக புதிய மாவட்ட தலைவர்கள் பட்டியல் வெளியீடு..!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கான பா.ஜக்., தலைவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்களை கூறிக் கொண்டார்.
தமிழக பா.ஜ., அமைப்பு ரீதியாக, 67 மாவட்டங்களாக செயல்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பரில் உள்கட்சி தேர்தல் துவங்கியது. முதல்கட்டமாக, கிளை தலைவர்களும், மண்டல தலைவர்களும் நியமிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, மாவட்ட தலைவர்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. ஒரு மாவட்டத்திற்கு தலா மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, கட்சி மேலிட தலைவர்களின் ஒப்புதலுக்கு சமீபத்தில் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட தலைவர்களின் பட்டியல் மட்டும் இன்று வெளியாகியது.
அமைப்பு பருவம் 2025
புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிப்பு
தேசிய தேர்தல் அதிகாரி அவர்களின் அறிவுறுத்தலின் படி அமைப்பு தேர்தலில் கீழ்கண்ட மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
தங்களுடைய பணிகள் சிறக்க வாழ்த்துக்கள் pic.twitter.com/JRxdbYd3Dg
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) January 19, 2025
சேலம் – சசிகுமார்
திருநெல்வேலி வடக்கு -முத்து பலவேசம்
தென்காசி – ஆனந்தன் அய்யாசாமி
சிவகங்கை – பாண்டிதுரை
நாமக்கல் மேற்கு – ராஜேஷ் குமார்
நாமக்கல் கிழக்கு – சரவணன்
விருதுநகர் கிழக்கு – பென்டகன் பாண்டுரங்கன்
திண்டுக்கல் கிழக்கு – முத்துராமலிங்கம்
திருப்பத்துார் – தண்டாயுதபாணி
கடலுார் மேற்கு – தமிழழகன்
கடலுார் கிழக்கு – கிருஷ்ணமூர்த்தி
நீலகிரி – தர்மன்
மயிலாடுதுறை – நாஞ்சில் பாலு
அரியலுார் – டாக்டர் பரமேஸ்வரி
காஞ்சிபுரம் – ஜெகதீசன்
செங்கல்பட்டு தெற்கு -டாக்டர் பிரவீன்குமார்
கன்னியாகுமரி மேற்கு -சுரேஷ்
கன்னியாகுமரி கிழக்கு -கோப்புகுமார்
திருவள்ளூர் கிழக்கு -சுந்தரம்
தேனி – ராஜபாண்டியன்
திருச்சி – ஒண்டிமுத்து
கோவை தெற்கு – சந்திரசேகர்
ஜன. 20ம் தேதி, மீதமுள்ள மாவட்ட தலைவர்களின் பட்டியலை வெளியிட, பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதைதொடர்ந்து, மாநில தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது.இதனிடையே, மாவட்ட தலைவர்களாக பொறுப்பேற்றவர்களுக்கு பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மற்றும் @BJP4India தேசியத் தலைவர் திரு @JPNadda அவர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, @BJP4Tamilnadu புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தேசப்…
— K.Annamalai (@annamalai_k) January 19, 2025
இது குறித்து எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில், ‘பாரதப் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ., தேசியத் தலைவர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, புதிய மாவட்டத் தலைவர்களாகப் பொறுப்பேற்றிருக்கும் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசப் பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, தமிழகத்தில், நமது பாரதப் பிரதமர் மோடி வழிகாட்டுதலின்படி நல்லாட்சியைக் கொண்டு வரவும், வளர்ச்சியடைந்த பாரதம் என்ற இலக்கை நோக்கி, நமது தமிழகத்தைக் கொண்டு செல்லவும், அயராது உழைக்க வேண்டும் என்று அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’,இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Leave your comments here...