வாஜ்பாயின் நதிகளை இணைக்​கும் திட்​டம் – நாட்டின் முதலாவது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மோடி

இந்தியா

வாஜ்பாயின் நதிகளை இணைக்​கும் திட்​டம் – நாட்டின் முதலாவது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மோடி

வாஜ்பாயின்  நதிகளை இணைக்​கும் திட்​டம் – நாட்டின் முதலாவது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மோடி

முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்​தநாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. வெள்ளம் மற்றும் வறட்சிக்கு தீர்வாக, நாட்​டில் உள்ள நதிகளை இணைக்​கும் திட்​டத்தை வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்​மொழிந்​தது. இதன் முதல் திட்​டமாக கென் ​- பெட்வா ஆறுகள் இணைப்பு இருக்​கும் என கருதப்​படு​கிறது. 1,153 கிராம சேவா சதன்களை ரூ.437 கோடி​யில் கட்டு​வதற்கான திட்​டத்​துக்​கும் பிரதமர் மோடி பூமி பூஜை செய்​தார்.

முன்​னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 100-வது பிறந்​தநாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்டி, டெல்​லி​யில் உள்ள அவரது நினை​விடத்​தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்​சர்கள் உள்ளிட்​டோர் மலர் தூவி மரியாதை செலுத்​தினர்.

இதையடுத்து, மத்திய பிரதேச மாநிலம் கஜுராஹோ சென்ற பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற நிகழ்ச்​சி​யில் வாஜ்பாய் நினைவு அஞ்சல்​தலை, நாணயத்தை வெளி​யிட்​டார்.

பின்னர், கென் – பெட்வா ஆறுகள் இணைப்பு திட்​டத்​துக்கு அடிக்கல் நாட்​டி​னார். மாநில முதல்வர் மோகன்யாதவ், மத்திய நீர்​வளத் துறை அமைச்சர் சி.ஆர்​.பாட்​டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

ரூ.44,605 கோடி​யில் செயல்​படுத்​தப்பட உள்ள இந்த திட்​டத்​தின்​கீழ் தவுதான் அணை கட்டப்​படும். அங்கிருந்து இரு ஆறுகளுக்கு இடையே 221 கி.மீ. தூரத்​துக்கு இணைப்பு ஏற்படுத்​தப்​படும். இதன்​மூலம் மத்திய பிரதேசத்​தின் 10 மாவட்​டங்களை சேர்ந்த 44 லட்சம் பேருக்​கும், உத்தர பிரதேசத்​தின் 21 லட்சம் பேருக்​கும் குடிநீர் விநி​யோகம் செய்​யப்​படும்.

இதுதவிர, சுமார் 2 ஆயிரம் கிராமங்களை சேர்ந்த 8.11 ஹெக்​டேர் நிலம் நீர்ப்​பாசன வசதியை பெறும். இதன்​மூலம் 7.18 லட்சம் விவசாய குடும்​பங்கள் பயனடை​யும். மேலும் நீர்​மின்​சக்தி திட்டம் மூலம் 103 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும், சூரிய மின்​சக்தி திட்டம் மூலம் 27 மெகாவாட் மின்​சா​ரத்​தை​யும் உற்பத்தி செய்ய இந்த திட்டம் வகை செய்​யும். இதுதவிர, மத்திய பிரதேசத்​தின் கந்த்வா நகரில் நிறு​வப்​பட்​டுள்ள ஓம்காரேஷ்வர் மிதக்​கும் சூரிய மின்​சக்தி திட்​டத்​தை​யும் பிரதமர் மோடி நேற்று காணொலி வாயிலாக தொடங்கி வைத்​தார்.

வெள்ளம் மற்றும் வறட்சிக்கு தீர்வாக, நாட்​டில் உள்ள நதிகளை இணைக்​கும் திட்​டத்தை வாஜ்பாய் தலைமையிலான அரசு முன்​மொழிந்​தது. இதன் முதல் திட்​டமாக கென் ​- பெட்வா ஆறுகள் இணைப்பு இருக்​கும் என கருதப்​படு​கிறது. 1,153 கிராம சேவா சதன்களை ரூ.437 கோடி​யில் கட்டு​வதற்கான திட்​டத்​துக்​கும் பிரதமர் மோடி பூமி பூஜை செய்​தார்.

இதைத் தொடர்ந்து நடந்த பொதுக்​கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாவது: சுதந்​திரத்​துக்கு பிறகு, பாபாசாகேப் அம்பேத்​கரின் தொலைநோக்கு பார்வை இந்தியா​வின் நீர்​வளம் மற்றும் நீர் சேமிப்பு முயற்சி​களுக்கு வழிகாட்​டியது. அவரது முயற்​சியால் ​தான் இன்றும்கூட மத்திய நீர்வள ஆணையம் இயங்​கு​கிறது.

ஆனால், காங்​கிரஸ் கட்சி அவருக்கு உரிய அங்கீ​காரம் தர​வில்லை. நாட்டை ஆட்சி செய்வது தங்கள் பிறப்பு​ரிமை என்று காங்​கிரஸ் நம்பியது, ஆனால், நல்லாட்சி வழங்க தவறி​விட்​டது. மக்களுக்கு நன்மை செய்யாத அறிவிப்புகளை வெளி​யிடு​வ​தில் அவர்கள் கைதேர்ந்​தவர்​கள். காங்​கிரஸ் ஆட்சி​யின்​போது அடிக்கல் நாட்​டப்​பட்ட பல திட்​டங்கள் முடிவடைய 35 முதல் 40 ஆண்டுகள் வரை தாமதம் ஆனது.

மத்திய அரசு தற்போது செயல்​படுத்தி வரும் பிரதமரின் விவசா​யிகள் நிதி​யுதவி திட்​டம், மத்திய பிரதேச அரசு செயல்​படுத்​தும் மகளிர் நிதி​யுதவி திட்டம் ஆகிய​வற்​றால் விவசா​யிகளும், பெண்​களும் பயனடைந்து வருகின்​றனர். வாஜ்பா​யின் தொலைநோக்கு பார்வை என்னை போன்ற ஆர்வலர்கள் உட்பட பல தலைமுறை​யினருக்கு உத்வேகம் அளித்​துள்ளது. நாட்​டின் முன்னேற்​றத்​தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினை​வு​கூரப்​படும். மக்​கள் நலனில் கவனம் செலுத்து​வ​தி​லும், அரசின் ​திட்​டங்​கள் மக்​களுக்கு பயனளிப்​பதை உறுதி செய்​வ​தி​லும்​தான் பாஜக​வின் வெற்​றி உள்​ளது. இவ்​வாறு பிரதமர்​ மோடி பேசினார்​.

Leave your comments here...