50 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் ஆட்சி… விமோசனம் இல்லை – மக்களவையில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு..!

இந்தியா

50 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் ஆட்சி… விமோசனம் இல்லை – மக்களவையில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு..!

50 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர் ஆட்சி… விமோசனம் இல்லை  – மக்களவையில் காங்கிரஸ் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு..!

இந்திய அரசியலமைப்பு சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சாசனம் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இன்று நடைபெற்ற அரசியல் சாசன விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது, அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்களின் முன்னேற்றம் முக்கிய பங்காற்றியுள்ளது. அரசியலமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது இந்தியாதான்.

ஆயிரம் ஆண்டுகால ஜனநாயக பாரம்பரியத்தை கொண்டுள்ளதால் இந்தியா மிகப்பெரிய ஜனநாயகநாடு மட்டுமல்ல, ஜனநாயகத்தின் தாய் ஆகும்.அரசியலமைப்பு சாசனம் கொண்டுவரப்பட்டு 75 ஆவதை கொண்டாடும் நேரம் இது. இந்த கொண்டாட்டத்தில் நாடாளுமன்றமும் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியதாகவே உள்ளது. நாடாளுமன்றம், மந்திரி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது.அரசியலமைப்பு சாசனம் கொண்டுவரப்பட்டு 75 ஆவதை கொண்டாடும் நேரம் இது. இந்த கொண்டாட்டத்தில் நாடாளுமன்றமும் பங்களிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் நாட்டின் ஜனநாயக பாரம்பரியம் மீது மிகவும் உணர்வுப்பூர்வமாக இருந்துள்ளனர். பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமையை மிகவும் காலதாமதமாக வழங்கின. ஆனால் இந்தியாவில் அரசியலமைப்பு சாசனம் ஆரம்பத்திலேயே பெண்களுக்கு இந்த உரிமையை வழங்கியது. அரசியலமைப்பு சாசனம் உருவாவதில் பெண்கள் முன்னேற்றம் மிகப்பெரிய அரசு மேற்கொள்ளும் ஒவ்வொரு திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியதாகவே உள்ளது.

நாடாளுமன்றம், மந்திரி சபையில் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து வருகிறது.கடந்த 10 ஆண்டுகாலத்தில் எங்கள் அரசின் கொள்கைகள், முடிவுகள் அனைத்தும் இந்தியாவின் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் ஒற்றுமைக்காகவே 370 ஆவது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஆனால், இந்தத் தருணத்தில் பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர். கடந்த 75 ஆண்டுகளில் 50 முறை அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி மாற்றியமைத்துள்ளது. காலனிய ஆதிக்க மனநிலையில்தான் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு விமோசனமே இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள், அவசர நிலை மூலம் நாட்டையே சிறைபோல மாற்றினர். மேலும், அரசியலமைப்பை அவமதிப்பதும் புறக்கணிப்பதும் காந்தி குடும்பத்துக்கு பழக்கமாகிவிட்டது.

காங்கிரஸ் குடும்பம்தான் அரசியல் சாசனத்தைக் களங்கப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பம்தான் ஆக்கிரமித்துள்ளது; கட்சி சாசனத்தையே அவர்கள் மதிப்பதில்லை. அரசமைப்பு தொடர்பாக அவையில் சுமூகமான விவாதம் நடைபெற்றிருந்தால், இளைய தலைமுறையினர் பயன் பெற்றிருப்பர்.

நமது பாதையில் அரசமைப்பு குறுக்கிட்டால், அதனை மாற்ற வேண்டும் என்று நேரு குறிப்பிட்டார். இருப்பினும், அப்போதைய குடியரசுத் தலைவரும் அவைத் தலைவரும் நேருவை சரியான பாதையில் வழிகாட்ட முயற்சித்தனர். 1996 ஆம் ஆண்டில், ஒரே ஒரு வாக்கில் பெரும்பான்மையை இழந்த வாஜ்பாய் அரசு, அரசமைப்புக்கு முரணான வழிகளை நாடாமல் ராஜிநாமா செய்தது, அரசியலமைப்பு மீதான மரியாதையைக் காட்டுகிறது.

ஆனால், வாக்குகளுக்கு பணம் கொடுத்த பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் அரசு காப்பாற்றப்பட்டது.மதவாதிகளின் அழுத்தத்தால், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, புதிய சட்டத்தை ராஜீவ் காந்தி இயற்றினார்.நேரு விதைத்த விஷ விதைக்கு இந்திரா காந்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அவரது பதவியைப் பறித்ததால், அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவியைக் காப்பாற்றவே அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் அனுமதிக்கவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் ஓபிசி மக்களுக்கு இடஒதுக்கீடு கிடைக்கவில்லை. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு கொள்கையை எதிர்த்து மாநில முதல்வர்களுக்கு நேரு பல கடிதங்களை எழுதினார். மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உறுதியளிப்பதன் மூலம் தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த காங்கிரஸ் புதிய விளையாட்டை விளையாடுகிறது.

அதுமட்டுமின்றி, அண்ணல் அம்பேத்கருக்கு நாக்பூரில் நினைவிடம் அமைக்க வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. ஆனால், 10 ஆண்டுகால மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியில் அம்பேத்கர் நினைவிடம் கிடப்பிலே போடப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் கிடப்பில் போட்ட அம்பேத்கர் நினைவிடத்தை பாஜக ஆட்சியில்தான் நிறுவினோம்’’ என்று கூறினார்.இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியை விமர்சித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

Leave your comments here...