ரூ.11.70 லட்சம் லஞ்சப் பணத்துடன் காரில் ஊருக்கு கிளம்பிய ஊட்டி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா – மடக்கிப் பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார்..!
ஊட்டி: ஊட்டி கமிஷனர் தனது காரில் 11.70 லட்ச ரூபாய் எடுத்து சென்ற போது லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் பணம் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு வாடகை காரில் சொந்த ஊரான சென்னைக்கு, 11:70 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் செல்வதாக ஊட்டி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பரிமிளா தேவி மற்றும் போலீசார் ஊட்டி தொட்டபெட்டா சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், வார விடுமுறையை கழிப்பதற்காக நேற்று மாலை காரில் சொந்த ஊருக்கு கிளம்பியிருக்கிறார் ஜஹாங்கீர் பாஷா. கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா வந்த காரை சோதனையிட்டனர்.
அதில், 11.70 லட்ச ரூபாய் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின், கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை நகராட்சி கமிஷனர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக இரவு, 8:00 மணிக்கு போலீசார் அழைத்து சென்றனர். விசாரணை இரவு, 11:00 மணிக்கு மேலாக தொடர்ந்தது.
இந்த விசாரணை குறித்து தெரிவித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்:- பணத்திற்கான உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. கட்டடங்கள் புனரமைப்பு, அனுமதி போன்ற வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு லஞ்சம் வாங்கியதாக புகார்கள் வந்திருக்கிறது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
ஏற்கனவே இவர் திருவேற்காடு நகராட்சி, தேனி மாவட்டம் அல்லிநகரம் நகராட்சிகளில் ஆணையராக பணியாற்றி இருந்தார் . இதே போல் திருவேற்காடு, கொடைக்கானல், கரூர், சிவகாசி, விழுப்புரம், சத்தியமங்கலம் நகராட்சி ஆணையர்களும் தினசரி ” டி ” செலவுக்கு தான் வாங்குகிறார்களாம்
Leave your comments here...