உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு மலையேற்றத்திட்டம்… வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ.5099 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் – பாஜக அஸ்வத்தாமன் எச்சரிக்கை…!
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ.5099 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத்திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது. வெள்ளியங்கிரி மலை என்ன உங்கள் அப்பன் வீட்டு சொத்தா ? உதயநிதி ஸ்டாலின் அவர்களே ? என பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு இருக்கிற ஒரு அறிவிப்பில் தென்கைலாயமான வெள்ளியங்கிரி மலைக்கு செல்பவர்கள் ரூ.5099 ரூபாய் தமிழக அரசுக்கு கட்ட வேண்டும் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. ‘மலையேற்றத்திட்டம்’ என்ற பெயரில் இந்த அநியாயத்தை திராவிட மாடல் அரசு செய்துள்ளது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை வணங்கிவருகின்றனர். வெள்ளியங்கிரி மலைக்கு வருகிறவர்கள் ஆன்மீக பக்தர்களே தவிர மலையேற்றத்திற்கு வருகிற சுற்றுலா பயணிகள் அல்ல.
வெள்ளியங்கிரி மலைக்கு சிவராத்திரி தினத்தில் மட்டும் 3 லட்சத்திலிருந்து 4 லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். சித்ரா பௌர்ணமி தினத்தன்று சுமார் பத்து லட்சம் பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர்.
சித்ரா பவுர்ணமி அன்று மலை அடிவாரத்தில் சுற்றி இருக்கிற கிராமத்து மக்கள் வில்லு வண்டியில் வந்து வள்ளி கும்மி, காவடி, ஒயிலாட்டம், மயிலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி காவடி ஏந்தி கொண்டு வெள்ளையங்கிரி மலையில் ஏறுவார்கள்.
இனிவரும் காலங்களில் அந்த சுற்றுவட்டார கிராமத்து மக்கள் காவடியுடன் வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு உதயநிதிக்கு 5099 ரூபாய் தண்டம் கட்ட வேண்டுமா !? தாணிகண்டி, முல்லாங்காடு உள்ளிட்ட சுற்றியுள்ள பல கிராம மக்கள் , வெள்ளியங்கிரியில் மீது அமர்ந்திருக்கிற சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வருகின்றனர். இனிவரும் காலங்களில் அந்த கிராமங்களைச் சார்ந்த மக்கள் தன்னுடைய குலதெய்வத்தை கும்பிடுவதற்கு திராவிட மாடல் அரசுக்கு கப்பம் கட்ட வேண்டுமா!? வெள்ளியங்கிரிக்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் வரும் பக்தர்களை தடுப்பதற்கு உதயநிதி அவர்கள் திட்டம் தீட்டுகிறாரா !? என்ற கேள்வி எழுகிறது .
சனாதன இந்து தர்மத்தை அழிப்பேன் என்று உதயநிதி தொடர்ந்து கூறி வருகிறார். அனைவரும் அறிந்ததே . இது உதயநிதி முன்னெடுத்துள்ள சனாதன இந்து தர்ம ஒழிப்பு சதி திட்டத்தின் ஒரு அங்கமா என்பதை உதயநிதி தெளிவுபடுத்த வேண்டும்.
தென் கைலாயமான வெள்ளியங்கிரியில் தமிழ் பாட்டி அவ்வையார் அவர்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்ட வெள்ளை விநாயகர் கோவில் ,சீதை வனம் ,பீமன் களி உருண்டை, சித்தர் கூரை உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக மையங்கள் உள்ளன.வெள்ளியங்கிரி மலையின் ஆறாவது மலையான திருநீர் மலையில் உள்ள ஆண்டி சுனையில் இருந்து புனித நீரை எடுத்து வந்து கும்பாபிஷேகம் பண்ண முடியாத நிலையில் இருக்கிற திருக்கோவில்களில் அபிஷேகம் செய்தால் அந்த கோவிலில் உடனடியாக அபிஷேகம் நடக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
கடந்த வாரம் கூட திருவண்ணாமலையில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆய்வு என்கிற பெயரில் மலையை சுற்றி வந்தார். வேண்டுதலுக்காக கிரிவலம் வந்திருப்பார் என்று மக்கள் பலரும் நினைத்த நிலையில், இப்பொழுது, திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கும் கூட கட்டணம் வசூலிக்கலாம் என்ற மோசமான யோசனையில் உதயநிதி அங்கு வந்து இருப்பாரோ என்கிற சந்தேகம் எழுகிறது.
ஒரு மிகப்பெரிய ஆன்மீக ஆதார ஸ்தலமான வெள்ளியங்கிரி மலையின் வழிபாட்டை வெளிப்படையாகவே குலைக்கும் நோக்கத்தோடு இந்த அறிவிப்பை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக இந்த அறிவிப்பை ரத்துசெய்யவில்லை என்று சொன்னால் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்
Leave your comments here...