ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் – ஹாட்ரிக் வெற்றியுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக..!

அரசியல்

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் – ஹாட்ரிக் வெற்றியுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக..!

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல் – ஹாட்ரிக் வெற்றியுடன் 3வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக..!

ஹரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் மாலை 4.30 மணி நிலவரப்படி 50 தொகுதிகளில் வெற்றியை நெருங்குவதால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தல்: ஹரியானா சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 5-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில், 68% வாக்குகள் பதிவாகி இருந்தன. மொத்தமுள்ள 2 கோடியே 3 லட்சத்து 54 ஆயிரத்து 350 வாக்காளர்களில் ஒரு கோடியே 38 லட்சத்து 19 ஆயிரத்து 776 வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்குப் பிந்தைய பல்வேறு கருத்துக்கணிப்புகள், ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் கூறின.

இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (அக். 8) காலை 8 மணிக்குத் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

தேர்தல் முடிவுகள்: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளின்படி, மாலை 4.30 மணி அளவில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 27 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 22 தொகுதிகளில் முன்னிலை வகிப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்மூலம் அக்கட்சி 49 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்திருப்பதால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய தேசிய லோக் தளம் 2 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. சுயேட்சைகள் 2 தொகுதிகளில் வெற்றியும், ஒரு தொகுதியில் முன்னிலையும் வகிக்கின்றனர்.

ஹரியானாவில் காங்கிரஸ் பின்னடைவு: திடீர் திருப்பம் ஏற்பட்டது ஏன்?

தொடர்ந்து 10 வருடங்களாக பாஜக ஆட்சி நடைபெறும் சூழலில், மாநில அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி, மல்யுத்த வீரர்கள் போராட்டம், விவசாயிகள் போராட்டம் என இவை அனைத்தும் பாஜகவிற்கு பாதகமான சூழலலையும் காங்கிரஸ் ஆட்சி அமைப்பதற்கு சாதகமான ஏற்படுத்தும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது நிலவரம் மாறியுள்ளது.

மல்யுத்த நட்சத்திரங்கள் வினேஷ் போகட், பஜ்ரங் புனியா ஆகியோரை காங்கிரஸில் இணைத்து பலன் கிடைக்கவில்லை. மேலும், முதல்வராக இருந்த பாஜகவின் மனோகர் லால் கட்டாரை அகற்றி நயாப் சிங் சைனியை அம்மாநில முதல்வராக கொண்டுவந்தது பாஜக. இதனால் , மநில அரசின் மீது இருந்த மக்களுக்கு இருந்த அதிருப்தி தணிந்து பாஜகவிற்கு சாதகமான சூழலை உருவாக்கி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Leave your comments here...