சோதனைச்சாவடியில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: தேடப்படும் இருவரின் புகைப்படம் வெளியிட்டு..!
களியக்காவிளை- மார்த்தாண்டம் சந்தைரோட்டில் மணல் கடத்தலை தடுப்பதற்காக தனி சோதனை சாவடி உள்ளது. இந்த சோதனை சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி தேர்தல் பாதுகாப்பு பணிக்காக போலீசார் பணி அமர்த்தப்பட்டதால், ஒரு போலீஸ்காரர் அல்லது சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு இந்த சோதனை சாவடியில் களியக்காவிளை போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் (வயது 55) என்பவர் பணியில் இருந்துள்ளார். இரவு சுமார் 9.40 மணி அளவில் சோதனை சாவடி அருகே கார் வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சோதனைசாவடிக்கு சென்று அங்கிருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சனுடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. பின்னர் திடீரென அவரை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த திடீர் தாக்குதலை சற்றும் எதிர்பாராத வில்சனின் மார்பு, கழுத்து, வலது தொடை ஆகிய பகுதிகளில் குண்டு பாய்ந்தது. இதனால் ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்கள், தாங்கள் வந்த காரிலேயே தப்பி விட்டனர். துப்பாக்கி சத்தம் கேட்டு அந்த பகுதியில் இருந்தவர்கள் சோதனைசாவடி நோக்கி ஓடி வந்தனர். அங்கு குற்றுயிரும், குலையிருமாக உயிருக்கு போராடிய வில்சனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து வில்சனை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் வில்சன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர்.
TN 57 AW 1559 SCORPIO CAR
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மாவட்ட எல்லை சோதனைச் சாவடியில் பணியில் இருந்த SSI வில்சன் என்பவரை TN57 AW 1559 என்ற SCORPIO காரில் வந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் தலையில் மூன்று குண்டுகள் பாய்ந்தது
எதிரி தப்பி ஓட்டம் pic.twitter.com/A4qPCCCETZ— இந்துசேனை (@HinduSenai) January 9, 2020
வில்சனை துப்பாக்கியால் சுட்ட இருவரும், அருகிலுள்ள பள்ளிவாசல் வழியாக தப்பிச்செல்லும் சி.சி.டி.வி காட்சி வெளியானது. இதன் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவுபீக், ஷமீம் ஆகிய இரண்டு பேர் வில்சனை சுட்டுக்கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர் இந்த சம்பவத்தில், தேடப்படும் இருவரின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
இருவரையும் கேரள மாநில காவல்துறையுடன் இணைந்து தேடும் பணியில், தமிழக போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் தீவிரவாத இயக்கங்கள் உடன் தொடர்பு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
https://twitter.com/BharatTn/status/1215192408171769858?s=19
மேலும் எஸ்.ஐ.வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக கேரள மாநிலம் சங்குமுகத்தில் டிஜிபி லோக்நாத் மெகரேவுடன் தமிழக டிஜிபி திரிபாதி ஆலோசனை செய்தார். சுட்டுக்கொன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்கள் தொடர்பாகவும் திரிபாதி ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது..!
Leave your comments here...