ஈஷா சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..!

தமிழகம்

ஈஷா சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..!

ஈஷா சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம்..!

ஈஷா சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம், தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு மாரத்தானும்  நடைப்பெற்றது

கோவை : ஈஷா யோக மையம் சார்பில் ‘தூய்மையே சேவை இயக்கம்’ மூலம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுடன் இணைந்து தூய்மை பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் ‘தூய்மை பாரத இயக்கம்’ குறித்த விழிப்புணர்வு மாரத்தானும் கடந்த 30-ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் நூற்றுக்கணக்கான தூய்மைப் பணியாளர்கள் பயன்பெற்று உள்ளனர். மேலும் விழிப்புணர்வு மாரத்தானில் நூற்றுக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் ‘தூய்மையே சேவை இயக்கம்’ மூலம் தூய்மைப் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள், மரக் கன்றுகள் நடுதல் முதலான பல்வேறு செயல்பாடுகள் நடைபெற்று வந்தன. அந்த வகையில் ஈஷா சார்பில் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 5 நகர பஞ்சாயத்துகள் மற்றும் 10 கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட மொத்தம் 15 பஞ்சாயத்துகளில் உள்ள தூய்மை பணியாளர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் நூறு நாள் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாம்கள் நடைப்பெற்றன.

இந்த மருத்துவ முகாம்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைப்பெற்றது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்தகள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இலவச சர்க்கரை நோய் மற்றும் ஹீமோகுளோபின் இரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

இதனுடன் பாரத பிரதமரின் ‘தூய்மை பாரத இயக்கம்’ குறித்த விழிப்புணர்வை கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் ஈஷா சார்பில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடர் ஓட்டம் மாரத்தான் நடைப்பெற்றது. இதில் ஈஷா யோக மையத்தை சேர்ந்த 30 வயத்துக்குட்பட்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஆதியோகி முன்பு துவங்கிய இந்த மாரத்தான் செம்மேடு கிராமத்தில் நிறைவு பெற்றது. மேலும் செம்மேடு கிராமத்தில் தூய்மை பாரத இயக்கம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.

 

Leave your comments here...