பாலியல் புகார்… நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்’ கட்சியின் MLAவுமான முகேஷ் கைது செய்து விடுவிப்பு..!
பாலியல் புகாரில் பிரபல மலையாள நடிகரும், எம்எல்ஏவுமான முகேஷ் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
மலையாள திரையுலகில் பெண்களுக்கெதிராக பாலியல் துன்புறுத்தல்கள் பல நிகழ்ந்ததாக ஹேமா குழுவின் அறிக்கை வெளிக்காட்டியுள்ளது. இந்நிலையில், ஹேமா குழு அறிக்கை வெளியான பிறகு மலையாள திரையுலக பிரபலங்கள் பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.
அந்த வகையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏவும் மலையாள திரைப்பட நடிகருமான முகேஷ் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று(செப். 23) கைது செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக, முகேஷ் கைது செய்யப்படும் முன், பாலியல் புகாரின் அடிப்படையில் முகேஷிடம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணைக்கு முகேஷ் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் கைது செய்யப்படுள்ளார்.மரடு காவல் நிலையத்தில் முகேஷ் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், முகேஷ் முன்ஜாமீன் கோரி ஏற்கெனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில் அவருக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளது. இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்ட பின் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Leave your comments here...