திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு – தோஷம் போக்க சாந்தி ஹோமம், புனித நீர் தெளிப்பு..!

இந்தியா

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு – தோஷம் போக்க சாந்தி ஹோமம், புனித நீர் தெளிப்பு..!

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு – தோஷம் போக்க சாந்தி ஹோமம், புனித நீர் தெளிப்பு..!

திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரத்தை தொடர்ந்து கோவிலில் சாந்தி ஹோமம் நடந்தது.

திருப்பதி கோவில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த விவகாரம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது; கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

லட்டு விவகாரத்தில் அடுத்து என்ன செய்வது என்பது குறித்து திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அதிகாரி சியாமளா ராவ், கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி உள்ளிட்டோருடன் முதல்வர் சந்திரபாபு ஆலோசனை நடத்தினார்.இதன் முடிவில் இன்று(செப்.,23) முதல் 3 நாட்கள் சாந்தி யாகம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இன்று காலை திருப்பதியில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் சாந்தி ஹோமம் காலை 6 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏழுமலையான் கோயிலுக்கு ஏற்பட்ட தோஷத்தை போக்க யாகம் நடக்கிறது. மூன்று யாக குண்டங்கள் அமைத்து 8 வேத பண்டிதர்கள் கலந்து கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தி வருகின்றனர். முன்னதாக, கோவில் மடைப்பள்ளி உள்ளிட்ட அனைத்து இடங்களும் தூய்மை செய்யப்பட்டன.

Leave your comments here...