இரவு நேர புறநகர் மின்சார ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து – தெற்கு ரயில்வே..!
சென்னை கடற்கரையிலிருந்து இரவு வேளையில் தாம்பரம் வரை இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுகிறது.
அதன்படி, சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு இரவு 9.10, 9.30 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் செப்டம்பர் 3, 5, 7 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு அதிகாலை 4.15 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப்டம்பர் 4, 6, 8 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
மறுமார்க்கத்தில், தாம்பரத்திலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இரவு 10.40, 11.20, 11.40 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில்கள் செப்டம்பர் 3, 5, 7 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து.திருவள்ளூரிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இரவு 9.35 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப்டம்பர் 3, 5, 7 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து.
மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருவள்ளூருக்கு இரவு 7.50 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப்டம்பர் 3, 5, 7 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து. சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து அரக்கோணத்துக்கு அதிகாலை 4.05 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப்டம்பர் 4, 6, 8 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து.
கும்மிடிப்பூண்டியிலிருந்து சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு இரவு 9.55 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப்டம்பர் 3, 5, 7 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து. மறுமார்க்கத்தில், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டிக்கு இரவு 10.45 மணிக்கு புறப்படும் புறநகர் மின்சார ரயில் செப்டம்பர் 4, 6, 8 ஆகிய 3 நாட்களுக்கு முழுமையாக ரத்து.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...