ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. தமிழகளை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் – மன்னிப்பு கோர வேண்டும் -சென்னை ஐகோர்ட் உத்தரவு…!

தமிழகம்

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. தமிழகளை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் – மன்னிப்பு கோர வேண்டும் -சென்னை ஐகோர்ட் உத்தரவு…!

ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு.. தமிழகளை தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் – மன்னிப்பு கோர வேண்டும் -சென்னை ஐகோர்ட் உத்தரவு…!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே, செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்பு கோரினால் ஏற்றுக்கொள்ளப்படும் என அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டு வெடிப்புக்கு தமிழர்களே காரணம் என மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் இரு பிரிவினர் இடையே மோதலை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் மன்னிப்பு கோரினார் ஏற்றுகொள்ளப்படுமா என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்குமாறு தமிழக அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி ஜெயச்சந்திரன் கேள்வியெழுப்பியிருந்தார். இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது அரசுத் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஒன்றிய அமைச்சர் ஷோபா கரந்தலஜே மன்னிப்பு கேட்டால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார்.

மத்திய அமைச்சர் ஷோபா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செய்தியாளர் சந்திப்புக்கு பதில், மன்னிப்புகோரி பிரமாணபத்திரம் தாக்கல் செய்யவதாக தெரிவித்தார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி செய்தியாளர் சந்திப்பின்போது அவதூறு ஒரு கருத்து தெரிவித்துள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரினால் தான் சரியாக இருக்கும் என கருத்து தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி அதற்க்குள் மத்திய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கோரி அது தொடர்பாக நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Leave your comments here...