“The Deccan Chronicle” அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தீ வைத்த ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர்..!

இந்தியா

“The Deccan Chronicle” அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தீ வைத்த ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர்..!

“The Deccan Chronicle” அலுவலகத்தை அடித்து நொறுக்கிய தீ வைத்த ஆளும் தெலுங்கு தேசம் கட்சியினர்..!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் ஆங்கில நாளேடு டெக்கன் கிரானிகிள் (Deccan Chronicle) நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

சமீபத்தில் நடந்த மாநில சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி சார்பில் முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்றிருந்தார்

“விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையில் இருந்து ஆந்திர பிரதேச மாநிலத்தின் கூட்டணி அரசு அந்தர்பல்டி அடிக்கும்,” என்பது தொடர்பாக டெக்கன் கிரானிகிள் செய்தி வெளியிட்டு இருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் அந்நிறுவன அலுவலகத்தை தாக்கி உள்ளனர்

அத்துமீறி அலுவலகத்திற்குள் புகுந்த கட்சியினர் அங்கிருந்த மேசை, இருக்கைகள் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கியதோடு அலுவலக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அலுவலகத்தின் சுற்றுச் சுவர் மீது ஏறிவர்கள், அலுவலகத்தின் பெயர் பலகைக்கும் தீ வைத்துள்ளனர்.

டெக்கன் கிரானிகிள் வெளியிட்ட செய்தியில் உண்மையில்லை என்று கூறிய தெலுங்கு தேசம் கட்சியினர் விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிராக தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி அரசு தொடர்ந்து போராடும் என்று தெரிவித்தனர்.

டெக்கன் கிரானிகிள் நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த செய்தியாளர்கள், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும், அவர்கள் வெளியிட்ட செய்தி உண்மைதான் என்றும், அதனை எத்தகைய பிரச்சினையாலும் எடுக்க முடியாது என்று தெரிவித்தனர்.

Leave your comments here...