ரூ.100 கோடி நில அபகரிப்பு… முன் ஜாமீன் மனு தள்ளுபடி – அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு..?
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை போலி ஆவணங்கள் மூலம் மிரட்டி வாங்கிய வழக்கு தொடர்பாக, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது கரூர் நீதிமன்றம்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலிப் பத்திரம் மூலமாக ஏழு பேர் பத்திரப் பதிவு செய்திருந்த நிலையில், பாதிக்கப்பட்டவர், சப் ரிஜிஸ்டர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தனர்.
இந்த வழக்கில் காவல்துறையினர் தன்னையும் இணைத்து நடவடிக்கை எடுப்பதாக அறிந்து, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.இந்த முன்ஜாமீன் மீது இதுவரை மூன்று முறை விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இன்று (ஜூன் 25) மாலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், முன்னாள் அமைச்சரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இவ்வாறு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ள வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் மேல்முறையீடு தாக்கல் செய்யும் முன்னர், சிபிசிஐடி போலீசார் கைது செய்யக்கூடும் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சிபிசிஐடி போலீசார் அவரை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
Leave your comments here...