ராகுல் காந்தி, கெஜ்ரிவாலை பாகிஸ்தான் ஆதரிப்பது ஏன்..? பிரதமர் மோடி கேள்வி..?

அரசியல்

ராகுல் காந்தி, கெஜ்ரிவாலை பாகிஸ்தான் ஆதரிப்பது ஏன்..? பிரதமர் மோடி கேள்வி..?

ராகுல் காந்தி, கெஜ்ரிவாலை பாகிஸ்தான் ஆதரிப்பது ஏன்..? பிரதமர் மோடி கேள்வி..?

பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு இதுவரை 6 கட்ட வாக்குப் பதிவு முடிந்துவிட்டது. 57 தொகுதிகளுக்கான 7-வது மற்றும் இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு ஜூன் 1-ந்தேதி நடக்கிறது.

இந்த நிலையில் இந்த மாத தொடக்கத்தில் பாகிஸ்தானின் முன்னாள் மந்திரி சா பவாத் ஹுசைன் தனது எக்ஸ் தள பக்கத்தில், ராகுல் காந்தியின் பிரசார வீடியோ ஒன்றை பகிர்ந்து இருந்தார். ‘ராகுல் காந்தி பாகிஸ்தானின் சகோதரர்’ எனக் குறிப்பிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களை விமர்சித்து இருந்தார்.அதைத் தொடர்ந்து, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், ஓட்டுப் போட்ட பிறகு அதை எக்ஸ் தளத்தில் பகிர்ந்து இருந்தார்.

இந்த பதிவுக்கு பதில் அளித்த பாகிஸ்தான் முன்னாள் மந்திரி ”அமைதியும் நல்லிணக்கமும், வெறுப்பு மற்றும் தீவிரவாத சக்திகளை தோற்கடிக்கட்டும்” என பதிவிட்டார்.

இதற்கு கெஜ்ரிவால் பதில் அளிக்கும்போது, ”இந்தியாவில் நடைபெறும் தேர்தல் உள்விவகாரம். பயங்கரவாதத்தின் மிக பெரிய ஆதரவாளர்களின் தலையீட்டை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள்” என குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் பிரதமர் மோடி, தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘ராகுல் காந்தி, கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பது ஏன்? இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-எங்களுக்கு எதிராக வெறுப்பை வெளிப்படுத்தும் சிலருக்கு பாகிஸ்தானிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கிறது. அங்கிருந்து ஆதரவு குரல்கள் வருவது ஏன்? என்பது எனக்கு புரியவில்லை.இது மிக முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயமாகும். அதனால் விசாரணை நடத்தப்பட வேண்டும். நான் வகிக்கும் பதவியைப் பொறுத்தவரை இதுபோன்ற பிரச்சனைகளில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்றே நினைக்கிறேன்.

இந்தியா ஒரு முதிர்ந்த ஜனநாயகம், வளமான தேர்தல் கொள்கைகள், மரபுகளைக் கொண்ட நாடு. இந்தியாவின் வாக்காளர்களும் தங்கள் எண்ணங்களில் முதிர்ச்சியடைந்தவர்கள். அதனால், எந்த வெளிப்புற சக்தியாலும் பாதிக்கப்படமாட்டார்கள்.இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave your comments here...