நெஸ்லே செரலாக்.. குழந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும்  இல்லை – நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் விளக்கம்..!

இந்தியாஉலகம்

நெஸ்லே செரலாக்.. குழந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும்  இல்லை – நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் விளக்கம்..!

நெஸ்லே செரலாக்.. குழந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும்  இல்லை – நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் விளக்கம்..!

நெஸ்லேயின் செரலாக்கில் குழந்தைக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும்  இல்லை என நெஸ்லே நிறுவனத்தின் தலைவர் சுரேஷ் நாராயணன் தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஆய்வு நிறுவனமான ‘பப்ளிக் ஐ’ மற்றும் சர்வதேச குழந்தைகள் உணவு நடவடிக்கை நெட்வொர்க் `IBFAN’ சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, ஏழை நாடுகளில் விற்கப்படும் நெஸ்லேயின் செரலாக் மற்றும் நிடோவில் (பால் பவுடர்) கூடுதல் சர்க்கரை சேர்க்க படுவதாகவும், சில சமயங்களில் சர்க்கரையின் அளவு மிக அதிகமாக இருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களிலும், நெஸ்லே 2.7 கிராம் சர்க்கரை சேர்ப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யப்படும் நெஸ்லே 12-36 மாத குழந்தைகளுக்கான குழந்தை உணவுப் பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்படவில்லை. இந்த அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (NCPCR), இதுகுறித்து ஆய்வு நடத்துமாறு  FSSAI-க்கு வேண்டுகோள் விடுத்தது.

இது தொடர்பாக நெஸ்லே நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான சுரேஷ் நாராயணன் கூறியதாவது : “நெஸ்லேயின் செரலாக்கில் FSSAI பரிந்துரைத்தயின் அதிகபட்ச வரம்பை விட மிகக் குறைவாக உள்ளது. இதில் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய எந்தவிதமான தீங்கும்  இல்லை. தயாரிப்பில் உள்ள பெரும்பாலான சர்க்கரைகள் இயற்கை சர்க்கரைகள் ஆகும்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave your comments here...