இந்தியா
திருப்பதி ஏழுமலையான் பெயரில் ரூ.1161 கோடி டெபாசிட்..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆண்டுதோறும் பக்தர்களின் வருகை அதிகரித்து வருவதால், ஏழுமலையான் கோயிலின் வருவாயும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.1,161 கோடியை தேவஸ்தான நிர்வாகிகள் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் சுவாமி பெயரில் டெபாசிட் செய்துள்ளனர். ஏழுமலையான் பெயரில் இதுவரை ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
2023-24-ம் நிதியாண்டில் மட்டும் 1,031 கிலோ தங்கம் டெபாசிட் செய்தனர். இதன் மூலம் ஏழுமலையானுக்கு இதுவரை 11,329 கிலோ தங்கம் டெபாசிட் ஆகி உள்ளது.ரொக்கம் மற்றும் தங்கம் டெபாசிட் செய்ததன் மூலம் திருப்பதி ஏழுமலையானுக்கு ஆண்டுக்கு ரூ.1,200 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
Leave your comments here...