குடியுரிமை சட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்: அமித்ஷா துவக்கி வைத்தார்..!
குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மாணவர் சங்கத்தின் சார்பில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி, எதிர்க்கட்சிகள், பொய் பிரசாரம் செய்வதாக, பாஜக குற்றம்சாட்டி வருகிறது. இந்த சட்டம் தொடர்பான சந்தேகங்களை போக்கி, மக்களிடம் விளக்க, நாடு முழுவதும், 10 நாட்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட, பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டது.இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக, வீடு வீடாக சென்று, மக்களிடம், குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விளக்கம் அளிக்கவும், முடிவு செய்யப்பட்டது.
लाइव: श्री @AmitShah नागरिकता संशोधन अधिनियम-2019 पर जन जागरण अभियान के अंतर्गत दिल्ली के लाजपत नगर 2 में घर-घर जाकर जनसंपर्क करते हुए। #IndiaSupportsCAA https://t.co/TKg49YJe9E
— BJP (@BJP4India) January 5, 2020
இந்த நிகழ்ச்சியை பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா டில்லியில் லஜ்பத் நகரில் துவக்கி வைத்தார். ஒவ்வொரு வீடாக சென்று குடியுரிமை சட்டம் குறித்த பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சட்டம் குறித்தும் விளக்கமளித்தார்
Leave your comments here...