நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்…? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

அரசியல்

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்…? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை  உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்…? – எடப்பாடி பழனிசாமி கேள்வி

நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவள்ளூர் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:- “பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றன. தேசிய கட்சியுடன் கூட்டணி வைத்தால் எந்த நன்மையும் கிடைக்கவில்லை. அதனால், ஓட்டுபோட்ட மக்களுக்கு விசுவாகமாக இருந்து நாடாளுமன்றத்தில் செயல்படுவதற்கு, தமிழ்நாட்டின் உரிமையை காப்பதற்கு, தேவையான திட்டங்களை பெறுவதற்கு, நாடாளுமன்றத்தில் சுதந்திரமாக நமது கருத்துக்களை எடுத்து சொல்வதற்கு நாம் கூட்டணியில் இருந்து விலகி வந்து அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம்.

2019- நாடாளுமன்ற தேர்தலில் ஸ்டாலின் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்தார். திமுக கூட்டணியில் உள்ள 38 எம்.பி.க்கள் தமிழகத்திற்காக ஒன்றும் செய்யவில்லை. தான் முதல்-அமைச்சராக இருந்து செயல்படுத்தியதை கூறி மக்களிடம் ஸ்டாலின் வாக்கு கேட்க வேண்டும். ஆனால் பிரசாரத்தில் என்னைப் பற்றியே அதிகம் பேசுகிறார். என்னைப்பற்றி பேசி என்ன கிடைக்கப்போகிறது.

நீட் தேர்வை திமுகவும் காங்கிரசும் கொண்டுவந்தது. இன்று ரத்துசெய்வோம் என்று சொல்வதும் காங்கிரசும் திமுகவும் தான். இது வேடிக்கையாக உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் எப்போது சொல்வார்.” இவ்வாறு அவர் பேசினார்.

 

Leave your comments here...