அரைவேக்காடு தனமாக பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி – காட்டமாக விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

அரசியல்

அரைவேக்காடு தனமாக பேசுகிறார் எடப்பாடி பழனிச்சாமி – காட்டமாக விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

அரைவேக்காடு தனமாக பேசுகிறார்  எடப்பாடி பழனிச்சாமி – காட்டமாக விமர்சித்த பாஜக தலைவர் அண்ணாமலை..!

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி போதைப்பொருள் விவகாரத்தில் அரைவேக்காட்டுத்தனமான பேசுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

நேற்று சென்னையில் அதிமுக சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கத்தை விமர்சிப்பதோடு டாஸ்மாக் கடைகளை தொடர்ந்து நடத்தியதாக அதிமுகவை விமர்சித்துள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, “பாஜக ஆளுகின்ற மாநிலங்கள் பூராவும் அப்படித்தான் இருக்கிறது. இன்றைக்கு கூட பாஜக ஆளும் மாநிலத்தில் 450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளனர். அதற்கு அண்ணாமலை என்ன பதில் சொல்லப் போகிறார்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது அதிமுக ஆட்சியில் தான்.” எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம், செய்தியாளர்கள், எடப்பாடி பழனிசாமி விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவுமே புரியாமல் பேசுகிறார் என்பது ஆச்சர்யம், வருத்தம் மட்டுமல்ல, அது நகைச்சுவை. எல்லையோர மாநிலங்களின் வழியாகத்தான் போதைப்பொருள் உள்ளே வரும். குறிப்பாக முந்த்ரா பகுதி தான் உள்ளே வரும் ஏரியா. அங்கு போதைப்பொருட்களை பிடித்தால் அது சாதனை. அதனால் தான் பிப்ரவரி கடைசி வாரத்தில் குஜராத் மாநிலத்தில் போதைப் பொருட்களுடன் ஒரு படகை பிடித்துள்ளனர். அது ஈரானில் இருந்து தமிழ்நாட்டுக்கு வர இருந்த போதைப்பொருள். அதை முந்த்ராவில் பிடித்திருக்கிறார்கள் என்றால் அதற்கு கை தட்டி அவார்டு கொடுக்க வேண்டும்.

எல்லையோர மாநிலங்களில் எந்தளவுக்கு போதைப்பொருட்களை பிடிக்கிறார்கள் என்பதுதான் அவர்களது திறமை. முன்னாள் முதலமைச்சர் இதனை புரிந்துகொள்ள வேண்டும். அரைவேக்காட்டுத்தனமாக பதில் சொல்லக் கூடாது. இவரெல்லாம் முதலமைச்சராக பொறுப்பில் இருந்திருக்கிறார்.

நாகலாந்து, உத்தரகாண்ட், இமாச்சல், குஜராத் ஆகிய மாநிலங்களில் போதைப் பொருட்களை கைப்பற்றுகிறார்கள் என்றால் அது திறமை. தமிழ்நாட்டில் கஞ்சா பயிரிட்டு அறுவடை செய்கிறோமா? பங்காளிக் கட்சி என்பதை ஊர்ஜிதம் செய்கிறார்கள். திமுக அரசு மீது குற்றச்சாட்டு வைத்தால், அவர்களுக்கு பதிலாக முன்னாள் முதலமைச்சர் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

எல்லையோர மாநிலங்களில் துறைமுகங்களில் கஞ்சாவை பிடிப்பதற்கும், தமிழ்நாடு போன்ற மாநிலத்தில் போதை பொருட்களை பிடிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இந்த ஆபரேஷனை செய்வது மத்திய அரசு சார்ந்துள்ள என்.சி.பி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி யாரைக் காப்பாற்ற இவ்வாறு பேசுகிறார்? பங்காளிக் கட்சி என்பதை ஊர்ஜிதம் செய்கிறாரா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave your comments here...