15 விமான நிலைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

இந்தியா

15 விமான நிலைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

15 விமான நிலைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி..!

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று முதல் முதலாக அங்கு சென்றார். அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.அ

தன்பிறகு பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்துக்கு புறப்பட்டுச் சென்றார். விமான நிலையத்தில் இருந்து காசி விஸ்வநாதர் ஆலயம் வரை அவர் ரோடு ஷோ நடத்தினார். சாலையின் இருபுறமும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று மோடியை வாழ்த்தி கோஷமிட்டனர். ஆலயத்துக்குச் சென்ற பிறகு காசி விசுவநாதருக்கு பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். நேற்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்கினார்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அசம்கர் நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி இன்று கலந்துகொண்டார். உத்தர பிரதேச மாநிலத்துக்கான ரூ.42,000 கோடி நலத்திட்டங்களை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பேசினார்.

மேலும், 15 விமான நிலைய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விமான நிலையங்கள் ரூ.9,800 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. அதுபோல 12 புதிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலம் செல்லும் பிரதமர் மோடி அங்கு 70 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

Leave your comments here...