பேருந்துகள் வருகை நேரம், இருக்கும் இடத்தை கண்டறிய உதவும் “CHENNAI BUS” – IOS VERSION செயலி..!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நல்லாசியுடன், போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், Chennai Bus – IOS version (Apple mobile) செயலியை துவங்கி வைத்தார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், “அனைத்து சென்னை மாநகர பேருந்துகளில் தானியங்கி வாகனம் இருப்பிடம் (Automatic Vehicle Location) பேருந்துகள் வருகை நேரம், வந்துகொண்டிருக்கும் இடம் (Location) பொதுமக்களின் கைபேசியில் தெரியும்படி “CHENNAI BUS” (APPS) செயலி, கடந்த 04.05.2022 அன்று முதல் Android mobile தெரியும் வகையில் செயலி துவங்கப்பட்டது.
Chennai Bus செயலி IOS version (Apple mobile) தெரியும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்ற பொது மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு இணங்க, இன்று (22.02.2024) முதல் செயலியை IOS version (Apple mobile) தெரியும் வகையில் செயலி துவங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் “CHENNAI BUS” (APPS) செயலி வாயிலாக பின்வரும் விவரங்களை தெரிந்து கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது.
1. நகரத்திற்கு புதிதாக வரும் மக்கள் தங்கள் இருப்பிடம் (LOCATION) அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தம், அந்த நிறுத்ததிற்கு வந்து கொண்டிருக்கும் பேருந்து விவரம் நேரப்படி அறிந்து கொள்ளவும்,
2. மேலும் இந்த செயலி மூலம் தங்களது பயண திட்டத்தை முன்கூட்டியே வகுத்துக்கொள்ள ஏதுவாகவும்,
3.மேலும் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான் (SOS) அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வகையில் இச்செயலி அமைக்கப்பட்டுள்ளது., இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...