நாட்டின் சிறந்த பிரதமர் பட்டியல் – முதலிடத்தில் பிரதமர் மோடி..!
நாட்டின் சிறந்த பிரதமர் பட்டியலில் முதலிடத்தில் மோடி இடம் பெற்றுள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் வரையிலான மக்களின் மனநிலை குறித்த கருத்துக்கணிப்பை சி-வோட்டர், இந்தியா – டுடே நிறுவனங்கள் நடத்தின.
அந்த கருத்துக் கணிப்பில், சுதந்திர இந்தியாவின் சிறந்த பிரதமர் யார்? என்ற கேள்வி மக்களிடம் கேட்கப்பட்டது. அதில், பிரதமர் மோடியை 44 சதவீதம் பேர் சிறந்த பிரதமராக தேர்வு செய்துள்ளனர்.
அவருக்கு அடுத்ததாக முன்னாள் பிரதமர் வாஜ்பாயை 15 சதவீதம் பேரும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை 14 சதவீதம் பேரும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை 11 சதவீத பேரும் ஆதரித்துள்ளனர். மேற்கண்ட பிரதமர்களில், முன்னாள் பிரதமர் நேரு, ராஜீவ் காந்திக்கு மக்கள் ஆதரவு அளிக்கவில்லை.
பிரதமர் மோடியை அதிகம் பேர் தேர்வு செய்ததற்கான காரணங்களில், ஜம்மு – காஷ்மீரில் இருந்து 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதற்கு 12 சதவீதம் பேரும், பாகிஸ்தானுக்கு எதிராக நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை 9 சதவீதம் பேரும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 6 சதவீதம் பேரும், கொரோனா காலத்தில் மோடியின் பணிக்காக 6 சதவீதம் பேரும், ஊழலுக்கு எதிரான மோடியின் பணிக்காக 5 சதவீதம் பேரும் ஆதரவு அளித்துள்ளதாக அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...